அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் தோனி இருப்பார்… ஆனால் சிஎஸ்கே அணி கிடையாது… சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோனி..

0
Follow on Google News

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் தோனி ஒப்படைத்தார். அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு தடுமாறிய சென்னை 14 போட்டிகளில் 7 தோல்வி 7 வெற்றிகளை பதிவு செய்தது.

குறிப்பாக பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சென்னை நூலிலையில் பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது. இந்த நிலையில் 42 வயதாகி இருக்கும் தோனிக்கு சென்னையில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நடைபெறவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லை ஓய்வு முடிவை அறிவித்துவிட்டாரா என்று சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டி அளித்திருக்கிறார். அதில், இதுவரை தோனி அடுத்து சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து எந்த ஒரு முடிவையும் எங்களுக்கு அறிவிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை தோனி எந்த முடிவை எடுக்கிறாரோ. அவருக்கு 100% நாங்கள் துணை நிற்போம். இதுவரை அப்படித்தான் எங்களுடைய அணி இருக்கின்றது. தோனி என்ன முடிவு எடுக்கிறார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.

அவர் எது செய்தாலும் நாங்கள் கேட்போம். என்னை பொறுத்தவரை நூறு சதவீதம் தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்று நினைக்கின்றேன். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை முடித்து விட்டு எம்.எஸ்.தோனி சில நாட்களுக்கு முன் ராஞ்சிக்கு தன் குடும்பத்தினருடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த சீசன் தான் அவர் விளையாடும் கடைசிசீசனாக இருக்கும் என்ற தகவல் வெளியானது.

ஆனால் இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகமோ எம்.எஸ்.தோனியோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் அறிவிக்கவில்லை. இதனால் தோனி 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனிலும் விளையாடுவாரா என்று எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்துள்ளது. இதையடுத்து, மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் மகேந்திர சிங் தோனி சமூக வலைதளங்களில் மூன்று வரி பதிவை எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தோனி தனது பேஸ்புக் பக்கத்தில், “ இது பறக்க வேண்டிய நேரம். முக்கியமானதை செய்ய வேண்டிய நேரம் இது. நான் எனது சொந்த அணியை தொடங்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இத்துடன் கோப்பை ஒன்றின் எமோஜியும் அதில் இணைக்கப்பட்டு இருந்தது.

இதனால், எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் புதிய அணியை வாங்க போகிறாரா..? சென்னை அணியில் இருந்து விலகி புதிய அணியில் இணைய போகிறாரா..? என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் சிட்ரோன் (Citroen) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துடன் இணைந்துதான், டோனி இந்த பதிவை செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை சென்னையை அடுத்துள்ள திருவள்ளூரிலேயே அமைந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே தமிழகத்துடன் நெருக்கமாக இருப்பதைக் காண்பிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த தோனியை அது அம்பாசிடராக நியமித்து இருக்கின்றது.

இந்நிலையில் சிட்ரோன் நிறுவனத்துடன் இணைந்து அவருடைய ஊர் பெயரான ரஞ்சி என்கிற பெயரில் புதிய அணியை தோனி உருவாக்க இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி புதிய அணியை தோனி உருவாக்கினால், ஐபிஎல் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும், இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி வீரராக சிஎஸ்கே அணியில் களம் இறங்குவாரா.? அல்லது புதிய அணியின் உரிமையாளராக களம் இறங்குவாரா என்கிற விவாதம் எழுந்துள்ளது.