விடிய விடிய தோனியின் சோகத்தை கொண்டாடி மகிழ்ந்த கோலி… கடைசியில் ஆணவத்தில் ஆடி அசிங்கப்பட்ட கோலி…

0
Follow on Google News

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கண்டிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் வழக்கம் போல முதல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் ஒரு மாதமாக கடைசி இடத்தில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வீட்டுக்கு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டியில் 6 வெற்றிகளை பெற்றது.

குறிப்பாக கடைசி போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் 4வது அணியாக நுழைந்தது. மறுபுறம் எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் கடைசி 5 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் பெங்களூரு அணி ராஜஸ்தானை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இது சிஎஸ்கே அணி ரசிகர்களை மிகவும் வருத்தம் அடைய செய்திருக்கிறது. குறிப்பாக ஆர் சி பி யின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிஎஸ்கே ரசிகர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார். குறிப்பாக ஏதோ சிஎஸ்கே அணி ரசிகர்களை வெளிநாட்டு ரசிகர்கள் போல் பாவித்த விராட் கோலி தேவையில்லாமல் ரசிகர்களை பார்த்து வாயை மூடுங்கள் என்று சைகையில் காட்டினார்.

மேலும் சிஎஸ்கேவை தோற்கடித்த பிறகு ஏதோ ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை வென்று விட்டோம் என்பது போல் ஓவராக குதித்து சிஎஸ்கே ரசிகர்களின் வயிற்று எரிச்சலை பெற்றுக்கொண்டார். மேலும் நடுவர்களிடம் தேவையில்லாமல் வம்பு இழுத்து கெட்ட பெயரை விராட் கோலி பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முதல் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி பரிதாபமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தோல்விப் பாதையில் இருந்த ராஜஸ்தான் அணியும், வெற்றிப் பாதையில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பெங்களூர் அணியும் சந்தித்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சில் எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 700 ரன்களுக்கு மேல் குவித்து தனிநபர் ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், ஐபிஎல் கோப்பை இல்லாமல் வெறும் கையுடன் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியை வீழ்த்திய போது ஆர்சிபி அணி மட்டுமல்லாமல் ஆர்சிபி அணி ரசிகர்கள் அதிகமாக கொண்டாடினார்கள். சிஎஸ்கே ரசிகர்களை சீண்டுவது, மைதானத்திற்கு வெளியில் அத்துமீறியது, சிஎஸ்கே வீரர்கள் பயணித்த பேருந்து முன் ஆவேசமாக கொண்டாடியது என்று ஏராளமான வீடியோக்கள் வெளியாகின. மேலும் சிஎஸ்கேவை வீழ்த்திய அன்று தோனி சோகத்தில் மூழ்கி கிடக்க, மறுபுறம் கோலி உட்பட பெங்களுர் அணியினர் விடிய விடிய அதிகாலை 5 மணி வரை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது சிஎஸ்கெ ரசிகர்கள் கோபமடைய செய்தது. ஜெயிச்சது பரவாயில்லை, ஆனால், ஓவராக கொண்டாடி, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிஎஸ்கேவின் தோல்வியை அன்று பெங்களூரு மக்கள் மொத்தமாக கொண்டாடிய நிலையில், ஆர்சிபியின் நேற்றைய தோல்வியை நாடு முழுக்க சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டுவதாக நகைச்சுவையாக இந்த மீம் போடப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியால் ஐபிஎல் கோப்பையைதான் வெல்ல இயலவில்லை, சிஎஸ்கே அணியை வீழ்த்தியதற்காக வேண்டுமென்றால் தனி கோப்பையை வழங்கலாம் என ஆர்சிபி ரசிகர்களை கலாய்த்து இந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது. சிஎஸ்கே வீரர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.