டீம்ல இருந்து வெளியேற்றி விடுவேன்… ஹர்திக் பாண்டியாவை கடுமையாக திட்டிய ஆகாஷ் அம்பானி… சமாதனம் செய்த சச்சின்..

0
Follow on Google News

2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு கார சாரமான சம்பவங்கள் மும்பை அணியின் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. அதோடு கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் மத்தியிலும் அதிகளவில் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு பயிற்சி செய்யும் இடத்தில் மட்டும் இன்றி மைதானத்திலும் ரோஹித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா அவமரியாதையாக நடந்து கொள்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் ஏற்கனவே அதிக ஆட்டிட்யூட் காட்டும் பாண்டியா இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஓவராக ஆட்டிட்யூட் காண்பிக்கிறார் என்ற ஒரு கருத்தும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியே இரண்டாக பிரிந்து கிடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

அதன்படி, ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா போன்றோரும் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு இஷான் போன்ற சில வீரர்கள் ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், களத்தில் நிகழும் சில சம்பவங்களும் ரோகித் மற்றும் ஹர்திக் இடையேயான உறவு நேர்மறையாக இல்லை என்பதையே உணர்த்துகின்றன. இதனிடையே, ஐதராபாத் அணியுடனான போட்டியின்போது, பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்காவை அவமானப்படுத்தும் வகையில் பாண்ட்யா நடந்துகொண்டதாகவும் தற்போது சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் ஆடிய இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 8வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தனது இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இங்கிருந்து இன்னும் இரண்டு போட்டிகளில் அந்த அணி தோற்றால், பிளேஆஃப் சுற்றுக்கான பாதை மும்பைக்கு கடினமாகிவிடும். இத்தகைய சம்பவங்களால் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி கடுப்பாகி உள்ளார். அவர் களத்திலேயே மும்பை வீரர்களை அழைத்து திட்டிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. போட்டி முடிந்தவுடன், சச்சின், ஹர்திக், ரோகித் சர்மா மற்றும் சில வீரர்களை அழைத்து ஆகாஷ் அம்பானி அவர்களுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தார்.

அதாவது களத்தில் வீரர்கள் ஒரே அணியாக விளையாடவில்லை என்றும் இது போல் விளையாடினால் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஹர்திக் பாண்டியாவிடம் ஆகாஷ் அம்பானி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் மூத்த வீரரான ரோகித்தும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். மேலும் ஹார்திக் பாண்டியா வந்த பின்பு தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பிரச்னை மேல் பிரச்சனை என டென்ஷனான ஆகாஷ் அம்பானி, இது இப்படியே தொடர்ந்தால் ஹார்திக் பாண்டியாவை வெளியேற்றி விடுவேன் என கோபத்தில் கொந்தளித்தாக கூறப்படுகிறது.இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்களுடைய அறைக்கு சென்றபோது, சச்சின் டெண்டுல்கர் அனைவரையும் அழைத்து சமாதானப்படுத்தினயுள்ளார்.