தப்பி தவறி இதை மட்டும் செய்திடாத.. இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு தோனி கொடுத்த டிப்ஸ்… சமீர் ரிஸ்வி சிக்சருக்கு இது தான் காரணமா.?

0
Follow on Google News

சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வெற்றி பெற்றது. இந்த சீசன் சென்னை அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொடுத்துள்ளது. ருத்ராஜ் தலைமையில் சென்னை அணி ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அதே வெற்றியுடன் தற்போது குஜராத்க்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளது.

இந்த போட்டியில் தீக்சனாவிற்கு பதில் பத்திரனாவை கொண்டு களம் இறங்கியது சென்னை அணி. சென்னை போன்ற ஒரு மைதானத்தில் ஒரே ஒரு ஸ்பின்னர் உடன் களமிறங்கிய சிஎஸ்கே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் குஜராத்க்கு எதிராக இளம் சமீர் ரிஸ்வி தனது அறிமுக போட்டியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மிடில் ஓவரில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து இருந்தார் சிவம் துபே. ஸ்பின்னர்களை சிக்ஸர், பவுண்டரி என அடித்து நொறுக்கிய துபே 19வது ஓவரில் ரஷீத் கான் பந்தில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து இளம் வீரர் சமீர் ரிஸ்வி பேட்டிங் செய்ய வந்தார். ஐபிஎல்லில் அவர் எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே அதுவும் ரஷீத் கான் போன்ற ஒரு பவுலரை சிக்சருக்கு பறக்க விட்டார்.

மீண்டும் அதே ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ரிஸ்வி ரஷித் கானின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது குறித்து சமீர் ரிஸ்வி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அந்த போட்டியின் 19ஆவது ஓவரை ரஷித் கான் வீசியதும், பயிற்சியாளர் என்னிடம் வந்து இந்த ஓவரில் விக்கெட் வீழ்ந்தால் நீங்கள் உடனே களமிறங்குகள் என கூறினார்.

அதன்படி19ஆவது ஓவரில் களமிறங்கும்போது நீங்கள் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. அந்த சூழலில் பந்தை தெளிவாக பார்த்து அடிக்க வேண்டும் என்பதே எனக்கு முக்கியமான விஷயமாக இருந்தது.
உங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தெல்லாம் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. ஆனால், பந்து அடிப்பதற்கு ஏதுவான இடத்தில் வீசப்படும் பட்சத்தில், அதனை சரியாக எதிர்கொண்டு அடிக்க வேண்டும் என நினைத்தேன்.

எனது உள்ளூர் போட்டிகளை பார்த்தால் கூட அங்கு நான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளதை பார்க்கலாம். நான் எப்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். நான் சிறுவயது முதலே எனது மாமாவுடன் இணைந்து சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பயிற்சிபெற்றுள்ளேன்.

பல ஆண்டுகளாக நான் இதனை செய்துவருதால் சர்வதேச பந்துவீச்சாளருக்கு எதிராக என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. மார்ச் 16 அன்று நான் அணியில் சேர்ந்தபோது தோனியை முதல்முறையாக நேரில் சந்தித்தேன். அன்றைய தினம் நாங்கள் பெரிதாக எதுவும் பேசமுடியவில்லை. அதன்பின் நாங்கள் மைதானத்தில் ஓவ்வொரு நாளும் இணைந்து செயல்பட்டுவருகிறோம்.

அதிலும் அவர் மைதானத்தில், அழுத்தத்தை எப்படிக் கையாள்வது, கூட்டத்தின் முன் எப்படி விளையாடுவது என்பதற்கான சில குறிப்புகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். என்னுடைய இயல்பான விளையாட்டை விளையாடச் சொன்னார். மேலும் தோனி என்னிடம் ஐபிஎல் ஏலத்தின் போது வாங்கப்பட்ட தொகையை மறந்துவிடு. இங்கு ஒவ்வொருவரும் ஒரு விலைக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். சிலருக்கு குறைவாகவும், சிலருக்கு அதிகமாகவும் இருக்கும். ஆனால் இங்கு நீ எப்படி விளையாடுகிறாய், அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறாய் என்பதே முக்கியமானது என்று தோணி தனக்கு அட்வைஸ் செய்ததாக தெரிவித்துள்ளார் சமீர் ரிஸ்வி.