ஹர்திக் பாண்டியவை காப்பாத்த அம்பானி குடுமபத்தினர் செய்யும் தில்லாங்கடி… ரசிகர்கள் என்ன முட்டாள்களா.?

0
Follow on Google News

2024 ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான விமர்சனங்களும் முழக்கங்களும் அதிகமாக உள்ளன. சோசியல் மீடியா மட்டுமின்றி ஸ்டேடியத்திலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்திக்கு எதிரான முழக்கங்களை கோஷம் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான்- மும்பை அணி மோத உள்ளன. இந்த போட்டியின் போது ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பாமல் இருக்க மும்பை அணி நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்போதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல வலம் வந்து கொண்டிருந்த மும்பை அணி, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது. குறிப்பாக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கியதை ஏராளமான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் போட்டியின் போது ஸ்டேடியத்திலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்களை முழக்கமிட்டு வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மும்பை அணி ரசிகர்களே இப்படி கோஷம் இடுவதை பார்த்த அம்பானி குடும்பத்தினர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். முதல் கட்டமாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்யும் வேலைகளை முடுக்கி விட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி வான்கடே மைதானத்தில் களமிறங்க உள்ள மும்பை அணிக்கு ஆதரவாக ரசிகர்களைத் திரட்டவும் மும்பை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மைதானத்தில் பாண்டியாவுக்கு எதிரான முழக்கங்கள் வரக்கூடாது என்பதில் மும்பை அணி நிர்வாகம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹோம் கிரவுண்டில் நடைபெறும் போட்டி என்பதால் மும்பை அணிக்கு எதிராக ரசிகர்கள் யாரும் சட்டம் இருக்கக் கூடாது என்பதற்காகவும் பின்னணியில் தீவிரமான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அதாவது, ஸ்டேடியத்தில் ரசிகர்கள் யாராவது ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிட்டாலோ கூச்சலிட்டாலோ உடனடியாக காவலர்கள் மூலம் அவர்களைக் கண்டறிந்து வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மும்பை அணி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வான்கடே மைதான நிர்வாகமும் உதவி செய்யும் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த சில சீசன்களாகவே மும்பை அணி விளையாடும் போட்டிகளில் எதிரணி என் ஜெர்சி அணிந்து வரும் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக சில ஸ்டாண்டுகளில் மும்பை அணி ஜெஸ்ஸியில் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தன.அந்த வகையில் இந்த முறை ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக செயல்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதாவது ஹர்திக் பாண்டியாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது என ஹர்திக் பாண்டியவுக்கு எழுந்துள்ளது எதிர்ப்பில் இருந்து காப்பாற்ற பல தில்லாங்கடி வேலைகை நேரடியாக மும்பை அணையின் நிர்வாக உரிமையாளரான அம்பானி குடமபத்தினரே நேரடியாக செய்ய தொடங்கியுள்ள நிலையில், ரோஹித் சர்மாவை அவமானம் படுத்தும் விதத்தில் செயல்படும் ஹர்திக் பாண்டியா பின்னனியில் அம்பானி குடும்பத்தினர் இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.