டோனியால் நடக்க கூட முடியவில்லை… என்னாச்சு.. நல்லா தானே இருந்தாரு… அடுத்தடுத்து இனி விளையாட மாட்டாரா.?

0
Follow on Google News

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று போட்டிகளில் களம் இறங்கியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. நடந்து முடிந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும், இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்ததால் சென்னை அணி ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த போட்டியில் எட்டாவதாக களம் இறங்கிய தோனி எதிர் கொண்ட பந்துகள் அனைத்தையும் சிக்ஸர் பௌண்டரி என அடித்து பறக்க விட்டார். இதனால் அந்த அணியின் ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர். இப்படியான நிலையில், தோனி டெல்லிக்கு எதிரான போட்டியின் போது இடது காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி இருப்பது தெரியவந்துள்ளது.

விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்ட போது, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிதானமாக விளையாடி 191 ரன்களை குவித்திருந்தது. அதை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. விசாகப்பட்டினம் மைதானத்தில் பந்து எந்த திசையில் பவுன்ஸ் ஆகும் என்பதை யூகிக்க முடியாமல் போனதால் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இருப்பினும், சென்னை அணி விடாமுயற்சி செய்து மேலே ஏறி வந்தது. சென்னை அணி டெல்லியில் முறியடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் எட்டாவதாக தோனி பேட்டிங் செய்ய இறங்கினார்.
16 பந்துகளில் மூன்று சிக்ஸ், 4 பவுண்டரி என அடித்து துவம்சம் பண்ணிய தோனி 37 ரன்களை குவித்தார் தோனி. சென்னை அணிக்கு தோல்வி உறுதி என்று தெரிந்த போதிலும், கடைசியாக களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தோனி ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் இந்த போட்டியின் போது தோனி களமிறங்க மாட்டார் என்ற வதந்திகளும் பரவி வந்தன.
தோனியின் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக அவினாஷ் ஆரவல்லி பேட்டிங் செய்வார் என்று கூறப்பட்டன. ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றிப் புள்ளி வைக்கும் வகையில், காலில் காயத்துடன் தோனி களம் இறங்கியுள்ளார். இந்த ஆட்டம் முடிந்த பின் விசாகப்பட்டினம் மைதான ஊழியர்களுடன் தோனி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது அவரது காலில் ஐஸ் பாக் கட்டியிருப்பது தெரியவந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் சிஎஸ்கே அணி அதன் அதிகாரப்பூர்வை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனி இடது காலில் ஐஸ் பாக் கட்டிக் கொண்டு ஓய்வறைக்கு செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு தான் கொடுத்த பரிசு என்று தோனி கூறி இருப்பதாகவும் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இடது கால் காயத்துடன் தோனி செல்லும் வீடியோவுக்கு பின்னால் “ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்” என்ற பாடலையும் சிஎஸ்கே அணி ஒலிக்க விட்டுள்ளது. இப்படி காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்ய தோனி முன் வந்ததால் அவரது ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

ஏப்ரல் ஐந்தாம் தேதி போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. போட்டிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் தோனிக்கு போதுமான ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே எதிர்வரும் போட்டியிலும் தோனி நிச்சயமாக விளையாடுவார் என்பதை எதிர்பார்க்கலாம்.