பாஜகவுக்கு எதிராக திமுகவுடன் கை கோர்க்க அதிமுக போட்ட திட்டம்…. வியூகத்தை உடைத்தெறிந்த அண்ணாமலை…

0
Follow on Google News

கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணி வெளியே வந்த பின்பு, திமுகவை எதிர்த்து அதிமுக அரசியல் செய்வதை விட அதிகமாக பாஜகவை எதிர்த்து தான் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசியல் இருந்து வந்ததை பார்க்க முடிகிறது, குறிப்பாக அவர்களின் ஒரே டார்கெட் பாஜக தலைவர் அண்ணாமலை தான் என்பதை அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து அண்ணாமலையை வசைபாடி வந்தது மூலம் அம்பலமானது.

எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு பாஜக மற்றும் அண்ணாமலை மீது இந்த அளவுக்கு கடும் கோபம் வந்ததற்கு காரணம், திமுக – அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றவர் பாஜக தலைவராக இருக்க கூடிய அண்ணாமலை. அதாவது திமுக – அதிமுக நாங்க பங்காளி கட்சிகள் எங்களுக்குள்ள அடித்துக்குவோம் கூடிக்குவோம் இடையில பாஜகவுக்கு இங்க என்ன வேலை என அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசிய பேச்சுக்கள் அதிமுகவுக்கு – திமுகவுக்கும் திரைமறைவில் கள்ள கூட்டணி உள்ளதா என்கிற சந்தேகத்தை கிளப்பியது.

மேலும் திமுக ஆட்சிக்கு வருவதர்க்கு மும்பு அப்போது அதிமுக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தண்டனை வாங்கி தரப்படும் என கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது, மேலும் எடப்பாடி முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல ஊழல் குற்றசாட்டுகளை திமுக முன்வைத்து ஆட்சிக்கு வந்தாலும் கூட இதுவரை எந்த ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் இதற்கு எதிர்மாறாக சிட்டிங் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் உள்ளே இருப்பதற்கும், அவரை தொடர்ந்து பல திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகள் தீவிரம் அடைந்து வருவதற்கும் பின்னணியில் மத்தியில் ஆளும் பாஜக தான் என்பதை அரசியல் விமர்சகர்கள் பலரும் முன் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்காத பாஜக, தொடர்ந்து திமுகவை நேரடியாக களத்தில் எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.

இதனால் தமிழக அரசியல் களம் திமுக – பாஜக என்கிற சூழல் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது. இந்நிலையில் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்கு சதவிகிதம் மிக பெரிய அளவில் தமிழக்தில் உயரும் என்றும், மேலும் தமிழ்கத்தில் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பும் பாஜகவுக்கு பிரகாசமாக உள்ளது என்கிறது கருத்து கணிப்புகள்.

அந்தவகையில் தமிழக அரசியலில் பங்காளி கட்சிகளான திமுக – அதிமுக நம்ம இருவரை தவிர்த்து பாஜகவை எந்த விதத்தில் வெற்றி அடைய செய்துவிட கூடாது என்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் திரைமறைவில் கைகோர்த்து உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளாக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதி.

நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலு தொகுதி, ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வன், தர்மபுரியில் போட்டியிடும் சௌமிய அம்புமணி, தேனி யில் போட்டியிடும் TTV தினகரன், ஆகியோருக்கு எதிராக திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் அதாவது இந்த இரன்டு பங்காளி கட்சிகளும் கை கோர்த்து வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது கோவையில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவுக்கு மறைமுகமாக திமுக ஆதரவு அளிப்பதும், அதே போன்று திருநெல்வழி, ராமநாதபுரம், தேனி போன்ற தொகுதியில் திமுகவுக்கு மறைமுகமாக அதிமுக ஆதரவாக அரசியல் பணிகளை செய்வது என பாஜகவை வீழ்த்த பங்காளி கட்சிகள் கைகோர்த்துள்ளதை முன்கூட்டியே அறிந்த பாஜக தலைவர் அண்ணாமலை, பங்காளி காட்சிகளில் வியூகங்களை உடைத்து எரியும் வகையில் தன்னுடைய அரசியல் நகர்வுகளை மிக சாதுர்யமாக நகர்த்தி வருவது, திரைமறைவில் திமுக – அதிமுகவின் தொடர்பு மக்கள் மத்தியில் அம்பலப்படும், அய்யோ.. மாட்டிகிட்டோம் பங்கு.. இனி எதற்கு திரைமறைவு கூட்டணி, என 2026 சட்டசபை தேர்தலில் திமுக – அதிமுக இரண்டும் வெளிப்படையாக பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.