காப்பி அடித்து எடுக்கப்பட்டதா ஆண்ட்டி இந்தியன் திரைப்படம்? இணையத்தில் எழுந்த சர்ச்சை!

0
Follow on Google News

ஆண்ட்டி இந்தியன் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்போது ஒரு பாலிவுட் படத்தைக் காப்பி அடித்து அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
யுடியுபில் தமிழ் சினிமாக்களை கண்டபடி கழுவி ஊற்றி விமர்சனம் செய்து பிரபலம் ஆனவர் மாறன். மாறன் என்று சொன்னால் கூட யாருக்கும் தெரியாது. ப்ளு சட்ட மாறன் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில் அவர் தானே ஒரு படத்தை எடுக்கிறேன் என்று சில வருடங்களுக்கு முன்னர் அறிவிப்பை வெளியிட்டார். படத்தைத் தொடங்கி முடித்த அவர் சென்ஸாருக்கு சென்றபோதுதான் பிரச்சனைகளை சந்தித்தார். படத்தில் 38 இடங்களில் வெட்டு சொன்ன சென்சார் அதிகாரிகள் அதற்கு படக்குழு சம்மதிக்காததால் சென்சார் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதையடுத்து நீதிமன்றம் சென்று படக்குழுவினர் சான்றிதழ் பெற்றனர். இதையடுத்து திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி நேற்று எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தைப் பொறுத்தவரை நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே போல படம் சுத்தமாக திரைமொழியே இல்லாமல் கண்டமேனிக்கு எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இல்லை.

இந்நிலையில் இப்போது 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான டேக் தமாஷா டேக் என்ற படத்தின் கதையை லேசா மாற்றிப்போட்டுதான் ஆண்டி இந்தியன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமான படக்குழுவை சேர்ந்தவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.