மரணத்திலும் தன்மானத்தை இழக்காத விஜயகாந்த்… மரணத்திற்கு முன்பே அவர் சொன்ன வார்த்தை…

0
Follow on Google News

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு இருந்த போது, கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான கேயம்பேடில் இருந்த ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, சாலை விரிவாக்கத்துக்கு தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது. இதற்கு விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்து மண்டபத்தை இடிக்காமல் மேம்பாலம் கட்டலாம் என்று கூறிய விஜயகாந்த்.

மேலும் அதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை வரையறுத்து, அதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பி இருந்தார். ஆனால் அந்த மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அது சாத்தியப்படாது என்று கூறி நிராகரித்து விட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 2006 சட்டசபை தேர்தலுக்கு பின்பு நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு திருமண மண்டப இடிப்பு விவகாரத்தை எழுப்புவது திட்டமிட்ட சதி என தெரிவித்த விஜயகாந்த்.

என்னைப் அச்சுறுத்தி திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும், தேமுதிக கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் மற்றும் தேமுதிக கட்சி அலுவலகத்தை இடிக்கப்போவதாக கேப்டன் விஜய்காந்த் பகிரகமாக அந்த காலகட்டத்தில் பேசியிருந்தார்.

மேலும் நாங்கள் நஷ்டஈடுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரியதாக மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளதும் பொய்யான தகவல்.குடிசைப் பகுதி மக்களுக்கு வீடு வழங்குதல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு எனது மண்டபத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வேண்டுமென்றே என்னையும், எனது கட்சியையும் அழிக்கும் நோக்கில் இந்த மண்டபம் இடிக்கப்படுகிறது.

இது அரசியல் பழிவாங்கும் படலம்.இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இதுகுறித்து பேசுகிறேன். திமுகவினரின் நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக விமான நிலையத்திற்கு வலதுபுறமாக உள்ள நிலங்களை விரிவாக்கத் திட்டத்துக்குக் கையகப்படுத்தவில்லை. ஆனால், பொழிச்சலூர் குடியிருப்புப் பகுதிகளைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தன்னுடைய திருமணம் மண்டபம் இடிப்பது முழுக்க முழுக்க திமுகவின் அரசியில் பழிவாங்கல் என பகிரங்கமாக தெரிவித்து இருந்தார் கேப்டன் விஜயகாந்த்.

ஒருவழியாக விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமணம் மண்டபம் இடிக்கப்பட்ட போது, இடிக்கப்பட்ட மண்டபத்தை பார்த்துவிட்டு அடுத்த நாள் மனம் உடைந்து விஜயகாந்த் பேசுகையில், நேத்து மண்டபத்தைப் போய்ப் பார்த்தேன் சார். இடிஞ்சுகிடக்கிற மண்டபத்தைப் பார்த்தா, குடல் அறுந்து தொங்குற மாதிரி இருக்கு. வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில் போட்டுச் சம்பாதிச்சதில்லை.

ஊழல் செய்து சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம். அது இன்னிக்குக் கண்ணெதிரே நொறுங்கும்போது மனசில் சுருக்குனு ஒரு வலி. அவ்வளவுதான்.1 ஏக்கர் 56 செண்ட் இடத்தில் வெறும் 20 செண்ட் இடத்தை தான் விட்டானுக. என விஜயகாந்த் வேதனையுடன் பேசி இருந்தார், அப்படி விஜயகாந்துக்கு சொந்தமான அவர் வியர்வை சிந்தி உழைத்து சம்பாரிச்ச 1 ஏக்கர் 56 செண்ட் இடத்தில் கட்டப்பட்ட ஆண்டாள் – அழகர் திருமண மண்டபத்தை இடித்துவிட்டு மீதம் விட்டு வைத்த 20 சென்ட் நிலத்தில் தான் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்ய இருக்கிறது.

அந்த வகையில் வாழும் போதும் நேர்மையாக வாழ்ந்த மனிதன் விஜயகாந்த், மரணத்திற்கு பின்பும் கூட, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் விதத்தில் பீச் ஓரத்தில் அவர் உடல் அடக்கம் செய்யவில்லை, தன்னுடைய சொந்த இடத்தில் அடக்கம் செய்ய இருப்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..