கலாசாரத்தை சீர் கெடுக்கும் விஜய் டிவி..! அட..ச்சீ…முதலிரவு பற்றி இப்படியா பச்சையா பேசுவது…. வலுக்கும் எதிப்புகள்…

0
Follow on Google News

தமிழக தொலைக்காட்சிகளில் அடிக்கடி பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருவது விஜய் தொலைக்காட்சி, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஆடை அலங்காரம் உட்பட பெரும்பாலானவை மேற்கத்திய கலாச்சாரத்தை தொடர்பு படுத்தியே இருக்கும். ஆரம்ப கட்டத்தில் ரியாலிட்டி ஷோ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஜய் தொலைகாட்சி அதன் பின்பு மற்ற தொலைக்காட்சி போன்றே சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கியது.

பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டில் குடும்பத்துடன் பார்க்கும் நிகழ்ச்சி என்பதால், கண்ணியமான வசனங்கள் காட்சிகள் இடம் பெரும், ஆனால் விஜய் தொலைகாட்சியில் ஆரம்ப கட்டத்தில் கனெக்க்ஷன் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நண்டு ஜெகன் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என நிகழ்ச்சிகளில் வாயிலாக தமிழ் சமுதாயத்தை சீரழித்து வந்த விஜய் தொலைக்காட்சி தற்போது சீரியலிலும் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியலில் முதல் இரவு அட்வைஸ் காட்சி தான் தற்போது கடும் எதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த கட்சியில் முதல் இரவுக்கு பெண் தயாராக இருக்கிறார், அப்போது ஒரு பெண் என்னமா டென்ஷனா இருக்கா.? என கேட்க, அதற்கு என்ன டென்ஷன் என முதலிரவுக்கு தயாராக இருக்கும் பெண் கேட்க , அதற்கு இன்னைக்கு உனக்கு சாந்தி முகூர்த்தம் என்கிற மற்றொரு கேள்விக்கு அதனால என்ன என்று முதலிரவுக்கு தயாராக இருக்கும் பெண் பதிலளிக்கிறார்.

அதற்கு முதலிரவுக்கு தயாராக இருக்கும் பெண்ணுக்கு அட்வைஸ் செய்யும் பெண் பேசியதாவது, எங்க காலத்தில் தான் நாங்க பயந்து பயந்து எதோ ஒரு கிழவி வந்து சொல்லி தந்து… நான் உனக்கு தைரியம் கொடுக்க வந்திருக்கேன்.. நீ தைரியமாக தான் இருக்க, ஆனால் விவரமாக இருக்கியே.? விவரம் தெரியாத குழந்தை பாம்பை கையில் பிடித்து தூக்கினால் அது தைரியமா இருக்கு என்று அர்த்தமா.? என்கிற இரட்டை அர்த்த வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது போன்ற இரட்டை அர்த்த வசனம் இடம்பெற்றுள்ள சீரியலுக்கு தமிழும் சரஸ்வதியும் என பெயரிட்டு ஒளிபரப்புவது தமிழையும், சரஸ்வதியையும் இழிவு படுத்தும் செயல் என்றும் உடனே இந்த சீரியல் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் எனறும், தொடர்ந்து தமிழக கலாச்சார சீர்கேடுகளை தொலைக்காட்சி வாயிலாக செய்து வரும் விஜய் தொலைக்காட்சியை முழுவதுமாக தடை செய்து கலாச்சாரம் காக்க பட வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடதக்கது.