வசூல் மழை பொழியும் துல்கர் சல்மானின் குருப்… வெளிநாடுகளில் சாதனை!

0

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள குருப் திரைப்படம் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து வருகிறது. மலையாள சினிமா கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது மெல்ல மீண்டு வர ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான துல்கர் சல்மான் நடித்துள்ள குருப் என்ற திரைப்படம் கேரளா மட்டுமில்லாமல், இந்தியாவிலும் குறிப்பாக வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.சுகுமாரன் குருப் என்ற கிரிமினலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதற்கு முன்னர் மோகன்லாலின் புலிமுருகன் மற்றும் லூசிபர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே இதைவிட அதிக தொகையை வசூல் செய்துள்ளதாம். துல்கர் சல்மானின் திரைவாழ்வில் மிகப்பெரிய வெற்றிப் படமாக குருப் அமையும் என சொல்லப்படுகிறது.