பரபரப்பாக நடக்கும் கமல்ஹாசனின் விக்ரம் ஷூட்டிங்… ரிலிஸ் தேதி இதுதான்!

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் உள்ளிட்ட பலர் நடிக்கும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் முதல் முதலாக கமல் படத்துக்கு இசையமைக்கிறார்.

பெரும்பாலான காட்சிகளை கமலைக் கொண்டு இப்போது லோகேஷ் படமாக்கியுள்ளார். குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவிலேயே முடித்து ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். 2022 ஆம் ஆண்டு கோடையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.