டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது அதிர்ச்சியாக இருந்தது…. முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

0
Follow on Google News

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து உலகக்கோப்பை தொடரோடு அவர் பதவி விலகினார். அதற்கடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்திய இளைஞர் அணியில் பல சாதனைகள் செய்து திறமையான வீரர்களை உருவாக்கி வந்த டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டதால் இந்திய அணிக்கு பல சாதகமான அம்சங்கள் உள்ளதாக சொல்ல்ப்படுகிறது. இந்நிலையில் டிராவிட்டின் சக காலத்தில் விளையாடியவரும் ஆஸி அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘டிராவிட் பதவியேற்றுக் கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு தெரியாது. ஆனால் அவருக்கு இளம் வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. என்னை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லி பிசிசிஐ சார்பில் பேசினார்கள்.

ஆனால் என்னால் அதிக நேரத்தை செலவிட முடியாது என்பதால் நான் மறுத்துவிட்டேன். பயிற்சியாளர் பொறுப்புக்கு முழுவதும் தகுதியானவர் டிராவிட்’ எனக் கூறியுள்ளார்.