செமத்தியா செருப்பால் அடி வாங்கிய ஹர்திக் பாண்டியா… மும்பை ரசிகர்கள் தரமான சம்பவம்.. ..பாண்டியாவை நோக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் சேர்கள்..

0
Follow on Google News

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆரம்ப கிரிக்கெட் ஆட்டங்களே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயம், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதற்கு காரணம், இதுவரை மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவின் கேப்டன்சி பதவியை பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்ததே ஆகும்.ஹர்திக் பாண்டியா தான் ஏதோ சூழ்ச்சி செய்து ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பதவியை பறித்து விட்டதாக ரசிகர்கள் பலரும்நம்புகின்றனர்.

இதனால் ஏற்கனவே ஹர்திக் மீது வெறுப்பில் இருந்த ரசிகர்கள், தற்போது நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருவதால் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் . ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்திலேயே ஆர்சிபி அணியுடன் மோதி தோல்வியுற்றது

அதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த தோல்வி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி சொதப்பி வருவதால், மும்பை அணி ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சோசியல் மீடியா மட்டுமின்றி ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் அவருக்கு எதிரான முழக்கங்களை கோஷம் விட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக மும்பை அணியை வழிநடத்திச் சென்ற ரோகித் சர்மா அசால்டாக ஐந்து முறை கோப்பைகளை வென்று கொடுத்திருந்தார். ஆனால் திடீரென குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு தாவிய ஹர்திக், கேப்டன் பதவியை கொடுத்தால் தான் மும்பைக்கு ஆடுவேன் என்று நிர்வாகத்திடம் கண்டிஷன் போட்டிருக்கிறார். மும்பை நிர்வாகமும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

முதல் போட்டியில் பவுண்டரி லைனில் நிற்க வைத்து ரோகித் சர்மாவை அலைக்கழித்த ஹர்திக் பாண்டியா, வேண்டுமென்றே ரோஹித் சர்மாவை அவமானம் படுத்த வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ரோஹித் சர்மாவை பாகுபலி போன்றும் கொண்டாடுவதும், ஹர்திக் பாண்டியாவை பல்லவ தேவன் போன்று வெறுப்பை அள்ளி வீசி வருகிறார்கள்.

இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்து விட்டது. இது ரசிகர்களின் வெறுப்பை அதிகப்படுத்தியது. இதன் விளைவாக, பொது இடம் ஒன்றில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், போட்டியின் முடிவில் ஹர்திக் பாண்டியா பேச தொடங்கிய போது அங்கிருந்த சேர்களை திரையின் மீது வீசியும் செருப்புகளை கழட்டி திரையில் தோன்றிய ஹர்திக் பாண்டியாவை அடித்தும், தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.