ஓடவும் முடியாது … ஒழியவும் முடியாது… வசமாக சிக்கிய மகாலக்ஷ்மி கணவர் ரவீந்திரன்…

0
Follow on Google News

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி கடந்த வருடம் திருப்பதியில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதேபோன்று ரவீந்திரனும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து செய்தவர். ஆகையால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

இவர்கள் திருமணம் அதற்கு முன்பு முன்பு நடந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை விட அதிகம் பேசப்பட்டு மிக பெரிய விவாதமாகவே உருவெடுத்தது, இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன் அதிகம் உள்ள ரவீந்திரனை நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது தான். ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி திருமணம் கேலி கிண்டலுக்கு உள்ளானாலும் இதையெல்லாம் இந்த தம்பதியினர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் ரவீந்திரன் மிக பெரிய கோடீஸ்வரர், அதனால் தான் அவரின் உடல் பருமனை கூட பொருட்படுத்தாமல் மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டார் என்று கூட சிலர் விமர்சனம் செய்து வந்தனர், இருந்தாலும் எந்த ஒரு நெகடிவ் விமர்சனத்தையும் எளிதாக எடுத்துக்கொண்ட மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சந்தோசத்தை பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் மிக பெரிய கோடீஸ்வரர் என கூறப்பட்ட ரவீந்திரன் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டார் என்கிற மோசடி புகார் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா வாழ் இந்தியரான விஜய் என்பவர் அளித்த புகாரில், “கிளப் ஹவுஸ் என்ற சமூக வலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, ரவீந்தர் நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தர வேண்டும் எனக்கூறி என்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டார். அதற்கு நான் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறி ரவீந்தரின் லிப்ரா புரொடக்‌ஷன் வங்கிக் கணக்கிற்கு இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாய் அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர் சில நாட்களுக்குள் 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார்.ஆனால், ரவீந்தர் சொன்னது போல் பணத்தை திருப்பி தரவில்லை.

பணம் குறித்து அவரிடம் கேட்டபோது இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவதூறாக பேசியதுடன், ஒரு கட்டத்தில் எனது செல்போன் எண்ணை ரவீந்தர் பிளாக் செய்துவிட்டார் “ மேலும் ஆன்லைன் மூலம் ரவீந்திர் சந்திரசேகர் பணம் கேட்டதற்கான ஆதாரம், பணம் கேட்டு அவர் பேசிய ஆடியோ உள்ளி ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்து இருந்தார் விஜய்.

இந்த புகாரை தொடர்ந்து சென்னை மத்திய பிரிவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தார்கள். இதனை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான ரவீந்திரன், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் , மேலும் புகார் தெரிவித்தவரிடம் சமரசம் ஆகிவிட்டதாக விசாரணையின் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா வாழ் இந்தியரிடம் பணத்தை பெற்று பல நாட்களாக டிம்மி கொடுத்து வந்த ரவீந்திரன், தற்பொழுது புகார் தெரிவித்த உடன் அலறியடித்து வாங்கிய பணத்தை கொடுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரவீந்திரன் பெரும் கோடீஸ்வரர் என இதற்கு முன்பு பல தகவல்கள் வெளியான நிலையில் மிகப்பெரிய கோடீஸ்வரர் 15 லட்சம் ரூபாய் மோசடியில் சிக்கி உள்ளது அவர் உண்மையிலே கோடீஸ்வரர் தானா என்கிற சர்ச்சை வெடித்துள்ளது, மேலும் மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அதற்கும் மோசடி புகாரில் ரவீந்திரன் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.