தியேட்டர்களுக்கு வைத்த ஆப்பு… ரஜினி, விஜய், அஜித் படம் வெளியாவதில் சிக்கல்.. என்ன ஆப்பு தெரியுமா.?

0
Follow on Google News

சமீபத்தில் சினிமா துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மேலும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் சீர்குலைந்து தத்தளித்து கொண்டிருக்கிறது.

இனிமேல் வருமான வரித்துறையினர் தன்னை தீவிரமாக கண்காணிப்பதை உணர்ந்துள்ள அன்புசெழியன். இனி சினிமாவில் முதலீடு செய்து ரிஸ்க் எடுப்பதை விட, வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், இனி படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

மேலும் நடந்து முடிந்த வருமானவரித்துறை சோதனையில் பெரும்பாலும் கருப்பு பணம் புழங்குவது திரையரங்குகளில் தான் என்பது வருமானவரித் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் திரையரங்குகள். அந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை 2000ரூபாய், 3000 ரூபாய்என அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்கின்றனர்.

ஆனால் வருமான வரித்துறையில், 100 ரூபாய் 200 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்ததாக தவறான கணக்கை காட்டி ஏமாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் அனைத்தும் இணையதள வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே பார்முலாவை தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் கடைபிடிக்க வேண்டும் என்கின்ற விதியை வருமான வரி துறை விரைவில் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படம் பார்க்க திரையரங்குகளுக்கு வருகை தருகின்றவர்கள் இனி ஆன்லைனில் தான் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். மேலும் திரையரங்குகளுக்கு சென்று டிக்கெட் வாங்கினாலும் அங்கே கம்ப்யூட்டர் மூலமாகத்தான் டிக்கெட் வாங்க முடியும் என்கின்ற விதியை வருமானவரித்துறையினர் அமல்படுத்த உள்ளனர்.

இதனால் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை இனி திரையரங்குகள் அதிக விலை கொடுத்து வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் என கூறப்படுகிறது. ஒரு பக்கம் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்தப் போவதாக அன்புச் செழியன் எடுத்துள்ள முடிவு. அதே நேரத்தில் மறுபக்கம் திரையரங்குகளில் அதிக விலைக்கு டிக்கெட் விற்க முடியாத சூழல். இந்த நிலையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

200 கோடி முதலீடு மாதம் 20 கோடி சம்பாரிக்கு சூர்யா.. என்ன தொழில் தெரியுமா.?