தலைக்கு 500 ரூபாய்….சூர்யாவின் தில்லாலங்கடி வேலை… இதெல்லாம் ஒரு பொழப்பா.?

0
Follow on Google News

புதிய படங்கள் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் முதல் ஷோவின் போது படம் பார்த்து வெளியே வருபவர்களிடம் யூடியூப் சேனல்கள் கருத்து கேட்பார்கள். அதன் அடிப்படையிலேயே அந்தப் படத்தின் வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கும். அந்த வகையில் ஒரு படம் நன்றாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனம் அதிக புரமோஷன் செய்து விளம்பரம் செய்தாலும், படத்தை பார்த்து வெளியே வருகின்ற ஒரு பத்து பேர் சொல்கின்ற கருத்து அந்த சினிமாவின் ஒட்டுமொத்த தலையெழுத்தையுமே மாற்றி விடுகிறது.

மேலும் பெரும்பாலான மக்கள் படத்தின் ரிவ்யூ பார்த்து செல்லக்கூடிய மனநிலையில் தான் உள்ளனர். இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தங்களுடைய படத்தை ஓட வைப்பதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் பார்முலாவை கையில் எடுத்துள்ளார்கள் .பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அழைத்து வரப்படுகின்றவர்கள் ஒரு குவாட்டர், கோழி பிரியாணி, ரூபாய் 200 கொடுத்து கூட்டத்தை சேர்ப்பார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் அவருடைய தம்பி கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் படத்தை மக்கள் மத்தியில், மக்கள் கருத்து போல் கொண்டு சென்று படத்தை பிரபலப்படுத்துவதற்காக தயாரிப்பு தரப்பில் செய்துள்ள செயல் கேலி கூத்தாக உள்ளது. அதிகாலை முதல் ஷோக்கு சுமார் 50 பேர் தலைக்கு 500 ரூபாய் கொடுத்தும் சாப்பாடு போட்டும் மதுரையில் முக்கிய திரையரங்குக்கு விருமன் படம் பார்க்க அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

செட்டப் செய்து அழைத்து வரப்பட்டவர்கள் படம் பார்க்க வைத்து அவர்கள் வெளியே வந்து படத்தை புகழவும் வைத்துள்ளார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட திரையரங்கு முன்பு அணைத்து யூ டுயூப் சேனலும் வரவழைக்க பட்டுள்ளார்கள். பின்பு படம் முடிந்து காசு கொடுத்து, சாப்பாடு போட்டு, அழைத்துவரப்பட்டவர்கள் அனைவரும் விருமன் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள்.

யூ ட்யூபில் இந்த ரிவியுவை பார்த்து. ஆர்வமுடம் படம் பார்க்கச் சென்ற மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் இனிவரும் காலங்களில் ரிவ்யூ நம்பி படம் பார்க்கக் கூடாது என்கின்ற நிலைக்கு மக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் இப்படி காசு கொடுத்து ஆட்களை வர வைத்து ரிவ்யூ கொடுப்பதற்கு பின்னணியில் நடிகர் சூர்யா இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இதெல்லாம் என்ன பொழப்பு என்கின்றனர் கேள்விப்பட்டவர்கள்.

200 கோடி முதலீடு மாதம் 20 கோடி சம்பாரிக்கு சூர்யா.. என்ன தொழில் தெரியுமா.?