மருத்துவமனையில் பாரதிராஜா… காரணம் திருசிற்றம்பலம் படம்.. திரையரங்கில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா, ஆரம்ப கட்டத்திலேயே தொடர்ந்து பல சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்து இயக்குனர் இமயம் என பாராட்டுகளை பெற்றவர். பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான காதல் ஓவியம் படம் அவருடைய இயக்கத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்த முதல் படம்.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான காதல் ஓவியம் படம் வெளியாவதற்கு முன்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரையரங்குகளுக்கு பெரும் கூட்டத்தை அழைத்து வந்தது. ஆனால் எதிர்பார்ப்புடன் வந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

காதல் ஓவியம் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக, சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்குக்கு காதல் ஓவியம் படத்தை பார்ப்பதற்கு பாரதிராஜா சென்றுள்ளார். படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜவை மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர்.

மேலும் பாரதிராஜா திரையரங்கில் இருப்பதை அறிந்த ரசிகர்கள், அவரை நேரடியாக அசிங்கமாக திட்டி உள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த பாரதிராஜா, அன்றில் தொடங்கி பொதுமக்கள் கூடும் திரையரங்குகளில் சென்று தன்னுடைய படத்தை பார்ப்பதில்லை என்கின்ற முடிவுக்கு வந்தார். இந்நிலையில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவின் கதாபாத்திரம் பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்கள் பலர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி வந்துள்ளனர். தனக்கு கிடைத்த பாராட்டுக்கள் உண்மைதானா என்று ஆராய்வதற்காக, சுமார் 40 வருடங்களுக்குப் பின்பு பொதுமக்கள் கூடும் திரையரங்குகளில் தான் நடித்த திருச்சிற்றம்பலத்தை பார்க்க சென்னை சத்தியம் திரையரங்குகளுக்கு சென்றுள்ளார் பாரதிராஜா.

அவர் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் பாரதிராஜா நடிக்கும் காட்சிகள் வரும் பொழுது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டுவது, நகைச்சுவை காட்சிகளில் குலுங்கி குலுங்கி சிரிப்பதை பார்த்து, பாரதிராஜா ஆனந்தக் கண்ணீரில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியின் காரணமாக தான் அவரது உடலில் அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மானம், மரியாதை போச்சு… லெஜெண்ட் சரவணன் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… என்ன பிரட்சனை தெரியுமா.?