விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாது… மறைந்த பிறைசூடனுக்கு கண்டிஷன் போட்ட ஏ.ஆர்.ரகுமானின் அம்மா..! என்ன செய்தார் பிறைசூடன் தெரியுமா.?

0
Follow on Google News

1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக முதல் தடம் பதித்தார்.தொடர்ந்து 80களில் இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதினார். ’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பிறைசூடன் எழுதியதுதான்.

மேலும் ‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் இன்றுவரை திருமண வரவேற்பு மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் பாடலாகத் திகழ்கிறது. 1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’. ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் பிறைசூடன் எழுதியதே.

தொடர்ந்து ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ என்ற பாடல், ’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பிறைசூடன் எழுதிய வெற்றிப் பாடல்கள். ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார். 1990களில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் பாடலும் ‘சந்திரனே சூரியனே’ என்னும் பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ ‘மற்றும் தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ பாடலை எழுதினார். 2011இல் தெலுங்கு-தமிழ் இருமொழிப் படமான ‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பில் அனைத்துப் பாடல்களையும் வசனங்களையும் எழுதினார். இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தில் இறைநம்பிக்கையும் பக்தியும் கொண்ட பிறைசூடனின் எழுத்துப் பணி ராமனின் மேன்மையையும் சீதையின் உத்தம குணங்களையும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க உதவிற்று.

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு தன் வரிகள் மூலம் உணர்த்திய கவிஞர் பிறைசூடன், உடல்நலக்குறைவால் இயற்கை எய்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் தயார் பற்றி பிறைசூடன் பேசிய பழைய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது, அதில் ஒரு பொது நிகழ்ச்சியில் ஏர் ஆர் ரஹ்மானை சந்தித்த போது மறுநாள் எனக்கு ஒரு பாடலுக்காக என்னை அழைத்தார்.

அப்போது அவரின் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். உடன்பாடில்லை. யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை, பின் உள்ளே சென்று ஏ ஆர் ரகுமானை சந்தித்தேன் அவர் பல்லவியை சொன்னார் நான் ரசிகா ரசிகா என பாடல் வரிகளை அவருக்கு தந்தேன் என்று பிறைசூடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

சிவன் சொத்து குல நாசம், திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டம்.. திருச்சியில் நடத்த பாஜக ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேச்சு…