மத கலவரத்தை தூண்ட நினைக்கிறாரா ப்ளூ சட்டை மாறன்..?சர்ச்சைக்குரிய கட்சிகளால் தடை செய்யப் படுகிறதா ஆன்ட்டி இந்தியன்.?

0
Follow on Google News

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஆண்டி இந்தியன் ட்ரைலர் நேற்று வெளியானது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை புதிதாக வெளியாகும் சினிமாவில் குறை நிறைகளை நகைச்சுவையோடு விமர்சிக்கக் கூடியவர் தான் ப்ளூ சட்டை மாறன். பல படங்களை விமர்சித்த அவர் தற்போது தனியாக ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தது. தற்போது எதிர்ப்புகளை கடந்து இந்த படத்திற்கான டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த ஆன்ட்டி இந்தியன் படத்திற்கான ட்ரைலரை பார்க்கும் போது இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் மதத்தை வைத்து அரசியல் செய்யும் படமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் ப்ளூ சட்டை மாறன், பாட்ஷா என்ற பெயரில் நடித்துள்ளார்.

பாட்ஷா சிலரால் படுகொலை செய்யப்படுகிறார். அப்போது இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் மத போதகர்கள் எங்கள் மதம் முறைப்படிதான் இவரின் உடலுக்கு சடங்குகள் நடத்தப்பட வேண்டுமென்று அடித்துக் கொள்கின்றனர். இதற்கு நடுவில் அரசியல்வாதிகள் என ஒரு மத அரசியல் கலவரமே நடக்கிறது. இதைதான் இந்த படமும் சொல்ல நினைக்கிறது. இந்த படம் வெளியானால் பல வகையில் மத கலவரத்தை உண்டாக்க கூடும் என்று பல வகையில் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் குவிந்த வருகிறது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என்று ட்ரெய்லரில் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு ஒரு தரப்பினர், இது முழுக்க முழுக்க மதம் சார்ந்த படமாகவும், மேலும் குறிப்பிட்ட சில மதத்தை தவறாக சித்தரிப்பது போன்று தெரிகிறது, ஆகையால் இந்த படம் வெளியானால் மத கலவரம் வரலாம் என்றும், ஆகையால் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு ஆன்ட்டி இந்தியன் படத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது குறிப்பிடதக்கது.