வினியோகஸ்தர்கள் கடும் நெருக்கடி.! நீங்க தான் என்ன காப்பாத்தணும்.! எடப்பாடியாரிடம் சரண் அடைந்த விஜய்.!

0
Follow on Google News

நடிகர் விஜய் , நடிகர் விஜய் சேதுபதி மற்றும் முன்னணி நடிகர் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ஆடியோ வெளியீடு கொரோனா தொற்றுக்கு முன்பாக நடந்தது, அதன்பின்பு திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளராக நடிகர் விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ, இவர் நடிகர் விஜய்யின் மாமா முறை என கூறப்படுகிறது, இதனைத்தொடர்ந்து படம் பூஜை தொடங்கிய உடனே இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அனைத்து விநியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார், இந்நிலையில் குறிப்பிட்ட தேதியில் இந்த திரைப்படம் வெளியாகாமல் காலம் தாழ்த்தி செல்வதால் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவை சந்தித்து பணத்தை திரும்ப கேட்க தொடங்கினர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் இன்னும் சில தினங்களில் திரையரங்கு திறக்கப்பட்டு படம் வெளியாகிவிடும் என சமாதனம் செய்து வந்தனர், ஆனால் தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளி போனதால் விநியோஸ்தகர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர், ஒரு கட்டத்தில் நடிகர் விஜயை சந்தித்து பணத்தை திருப்ப கேட்டு விநியோஸ்தகர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர், இதனை தொடர்ந்து கடும் நெருக்கடிக்கு ஆளான நடிகர் விஜய் விநியோகஸ்தர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதித்தாலும் இருக்கையில் இடைவெளி விட்டே அமர நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தது, திரையரங்குகளில் 100 சதவீதத்துடன் அமர அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே லாபம் அடைய முடியும் என்பதால், மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து வினியஸ்த்தகர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த நடிகர் விஜய் இதற்கு மேல் ரிலீஸ் தேதியை காலம் தாழ்த்தினால் விநியோகஸ்தர்கள் நடிகர் விஜய் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளானார் விஜய்.

மாஸ்டர் வெளியாவதில் மேலும் காலம் தாமதம் ஏற்பட்டால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க முடிவு செய்து சந்தித்துள்ளார், இந்த சந்திப்பின் போது திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகள் நிரப்ப அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார் விஜய், மேலும் தான் கடும் நெருக்கடியில் தற்போது இருப்பதாகவும், நீங்கள் மனது வைத்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் என்னை நான் காப்பாற்றி கொள்ள முடியும், இல்லையென்றால் விநியோஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க நேரிடும் இதனால் பெரும் இழப்பு ஏற்படும் என எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் விஜய் சரணடைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் அனுமதிக்கப்படுமா என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது, கட்டுப்பாடுகளுடன் கோவில் திறக்கப்பட்டுள்ளது, பள்ளி கல்லூரி இன்னும் திறக்கப்படவில்லை , இந்த சூழலில் 100 சதவீதத்துடன் திரையரங்குகளில் இருக்கை அனுமதிக்க தமிழக அரசு முன் வருமா என்கிற சந்தேகம் நிலவி வருகிறது, ஆனால் நடிகர் விஜய் எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்துள்ளது கருணை காட்டுவாரா எடப்பாடி என்பதை பொறுத்திருந்து தான் பாக்க வேண்டும்.

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?