பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் உட்பட சினிமா துறையை சேர்ந்தவர்கள் மீது, தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரி சோதனை பரபரப்புக்கு மத்தியில். ரஜினிகாந்தின் திடீர் டெல்லி சென்று சில முக்கிய நபர்களை சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வருமான வரித்துறையினர் அன்புச் செழியன் வீட்டிலிருந்து கைப்பற்றிய டைரியில், அன்புச் செழியன் யாரிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளார்கள் என்கின்ற பெயர் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் அன்புசெழியன் தொடர்புடைய தயாரிப்பாளர்களை வருமானவரித்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முறையாக விளக்கம் கொடுக்காத நிலையில், மீண்டும் வருமான வரித்துறையினர் அன்புச் செழியன் உட்பட்ட அவருடன் தொடர்பில் இருந்த தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அன்புச்செழியன் மகள் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு நடிகர் அஜித் தவிர்த்து, பெரும்பாலான சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். அன்புச் செழியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ளும் அளவுக்கு அன்புச்செழியன் மீது ரஜினிகாந்த் நெருக்கம் இருந்தது அப்போதுதான் பலருக்கு தெரியவந்தது. இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு குறித்து பரபரப்பான செய்தியை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அன்புச் செழியனிடம் கோடிக்கணக்கான தன்னுடைய பணத்தை ரஜினிகாந்த் கொடுத்து வைத்திருந்ததாகவும், தற்போது நடைபெற்ற வருமான வரித்துறையில் ரஜினிகாந்த் பணம் பெருந்தொகை வருமான வரித்துறை கையில் சிக்கி உள்ளதால் அவசர அவசரமாக டெல்லி சென்ற ரஜினிகாந்த். அங்கே சில முக்கிய தலைவர்களை சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார் என்று பிரபல ஊடகம் ஒன்று பெயர் குறிப்பிடாமல் கிசு கிசு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநரை ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கான காரணம் என்ன என்பது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியலில் நமத்து போன பட்டாசு ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்தது. இனிமேல் ரஜினிகாந்த் அரசியலில் எதிர்காலம் இல்லாத ஒரு சூழலில் அரசியல் குறித்து ஆளுநரிடம் பேசினேன். ஆனால் அது குறித்து பத்திரிகையாளரிடம் பேச முடியாது என ரஜினிகாந்த் சொல்வதை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் பிரபல ஊடகங்கள் வெளியிட்ட செய்தி போன்று ரஜினிகாந்த் பணம் அன்புச்செழியனிடம் இருந்து, அது வருமான வரித்துறையிடம் சிக்கி இருக்கலாம் என்கின்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. அதே நேரத்தில் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் முக்கிய டைரி ஓன்று சிக்கியுள்ளதாகவும் அதில் ரஜினிகாந்த் உட்பட யாருடன் தொழில் ரீதியாக அன்புசெழியன் தொடர்பு வைத்திருக்கிறார் என்கிற பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரஜினிகாந்த் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் டெல்லிக்கும் பறந்து முக்கிய புள்ளிகளை சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில் தமிழகம் திரும்பி ஆளுநரை சந்தித்தார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற பரபரப்பான வருமானவரித்துறை சோதனைக்கு மத்தியில், திடீரென டெல்லி சென்று அடுத்த சில மணி நேரங்களில் தமிழகம் திரும்பி ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்.வழக்கம் போல் தமிழக மக்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.