சிவகார்த்திகேயனுக்கு எதிராக இமானை தூண்டிவிட்டது யார்.? பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்…

0
Follow on Google News

சமீபகாலமாக இணையத்தில் வைரலாக பேசப்படும் சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருபக்கம் இமான் கொளுத்திப்போட்ட பிரச்சினைக்கு இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் வாயைத் திறக்காமல் இருந்தாலும், பிரபலங்கள் சிலர் இமானுக்கு ஆதரவாகவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே, நடிகை குட்டி பத்மினி இமானுக்கு ஆதரவாக வீடியோவில் பேசியிருந்த நிலையில், இப்போது நடிகை ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. அப்படி அந்த நடிகை சிவகர்த்திகேயன் குறித்து என்ன கூறினார் என்பதைப் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது பல வெற்றிப்படங்களுக்கு இசையமைப்பாளர் இமான் அவர்கள்தான் இசையமைத்துள்ளார். சொல்லப்போனால், முழுக்க முழுக்க இமானின் இசையால்தான் நடிகர் சிவகார்த்திகேயன் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கினார். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவரை பாடகராகவும் இமான் அறிமுகப்படுத்தினார். இருவரும் அண்ணன் தம்பி போன்று பழகி வந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முற்றிலுமாக நின்று விட்டது.

இது தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறி பிரச்சினையை கிளப்பிவிட்டார். மேலும், அவர் என்ன துரோகம் செய்தார் என்பதை என்னால் வெளியில் சொல்ல முடியாது, அது என் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று முழுமையாக சொல்லாமல் பாதியை மட்டும் கூறியிருந்தார்.

இமானின் இந்த பேட்டி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றும் பேசப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் மொத்த இமேஜும் நொடிப்பொழுதில் நொறுங்கியது. இப்போது வரை சிவகார்த்திகேயன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கவில்லை, இருப்பினும் அவருக்கு ஆதரவாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து, நடிகை அனுபரமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதாவது, இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகி விடும் என்று நினைக்கும் இமான், விவாகரத்து செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டபின் இப்போது இதுகுறித்து பேச என்ன அவசியம் இருக்கிறது என்று கேள்விஎழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அனுபரமி, சிவகார்த்திகேயன் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு தரப்பினர் அவர் மீது வன்மத்தை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தொகுப்பாளராக இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். வளர்ந்து வரும் ஒரு நடிகர் மீது இப்படி ஒரு அவதூறை பரப்புகின்றனர், இது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காத சிலரால் தூண்டிவிடப்பட்டு நடக்கிறது. இமானை சிலர் ஏவி விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும், இமான் அளித்த பேட்டியில் தனது குழந்தை மீது இருக்கும் பாசத்தால் சிவா செய்த துரோகத்தை வெளியில் சொல்லவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், சிவகார்த்திகேயனுக்கும் குடும்பம் மற்றும் குழந்தைகள் இருக்கிறது என்பதை மறந்து விட்டாரா? அவர்களின் எதிர்காலம் என்னஆகும். யாராக இருந்தாலும் தயவு செய்து அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள் என்று நடிகை அனுபரமி தெரிவித்துள்ளார்.