போட்டியாளரை கேவலமாக நடத்திய விஜய் டிவி… மக்கள் கடும் எதிர்ப்பு.. பயந்து கொண்டு விஜய் டிவி என்ன செய்தது தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார்.

சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். தற்போது இரண்டு வீட்டிலுமே போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் பூர்ணிமா ரவி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த முறை ஓபன் நாமினேஷன் நடந்தது. அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் 5 wild card போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இந்தவாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

இந்த சீசனின் முதலாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக கமலுடன் பேசிய பிறகு வீட்டிற்குள் வந்தார் நடிகர் தினேஷ். பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி இரண்டாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மூன்றாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக வி ஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அடுத்த வைல்ட் கார்ட் போட்டியாளராக ஆர்.ஜே ப்ராவோ உள்ளே வந்தார். இவர் ஒரு வ்லாகர். கடைசியாக வைல்ட் கார்ட் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார் பாடகர் கானா பாலா.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியின் அதிகாரபூர்வ பக்கத்தில் இந்த வாரம் வெளியேறிய நபர்கள் குறித்து மறைமுகமாக கூறும் வகையில் மிக்ஸர் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த பதிவை நீக்கியுள்ளது விஜய் டிவி.

இந்த சீசன் சற்று வித்தியாசமாக உள்ளது. எதை எடுத்தாலும் கன்டென்ட் என போட்டியாளர்கள் பிளான் போட்டு ஆடுகிறார்கள். இந்நிலையில் இந்த சீசனில் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகியுள்ளனர். ரவீனா – மணி ஆகியோர் காதல் ஜோடியாக இருப்பது வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நேற்றும் இன்றும் பிக்பாஸ் சீசன் 7ல் புதிய காதல் ஜோடி குறித்த ஒரு வீடியோ ஒன்று, சோசியல் மீடியாக்களில் வட்டம் அடித்து வருகிறது.

அது யார் என்றால் நிக்சன் மற்றும் ஐஸு ஜோடி தான். டான்ஸர் ஆகும் கனவில் பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் நுழைந்த ஐஸு, பாடகரான நிக்சன் மேல் காதலில் விழுந்துள்ளார். அந்த வீடியோவில் ஐஸு, கண்ணாடிக்குள் இருக்கும் நிக்சனைப் பார்க்க வருகிறார். பின், கண்ணாடிக்கு அடுத்தமுனையில் இருக்கும் நிக்சனை கிஸ் அடிக்க முயற்சிக்கிறார்.