லியோ மோசம் தான்…. உண்மையை ஒப்பு கொண்ட் லோகேஷ்….

0
Follow on Google News

சமீப காலமாக விஜய் திரைப்படங்கள் தோல்வியடைய காரணம் விஜய் படத்தின் கதையில் தலையிடுவது தான் என்று பேச்சுக்கள் நிலவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் முன்னர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களுமே பெருமளவு வெற்றி பெற்றதற்கு காரணம் இயக்குனர் சுதந்திரம் தான். ஆனால், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் 50% விஜய் திரைப்படமாகவும் 50% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாகவும் தான் அமைந்திருந்தது.

இதனால் மாநகரம் கைதி போன்ற படங்களைப் போல லியோ திரைப்படமும் 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் பார்த்த பெரும்பாலான பேர் இந்த படம் 100% லோகேஷ் கனகராஜ் படம் இல்லை என்று தான் கூறி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்றும் அவரது உதவியாளரான ரத்தினகுமார் தான் இரண்டாம் பாதியை இயக்கினார் என்று இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்

இன்னொரு பக்கம், லியோ படம் 500 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இது உண்மையிலேயே வசூல் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை. அவரிடம் போய் யாராவது கணக்கா கேட்கப் போகிறார்கள்? தமிழகத்தில் 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்த்திருக்கிறார்கள் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடைபெற்ற ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் ‘லியோ’ திரைப்படத்தின் வசூல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிகழ்வில் லோகேஷ் பேசியதாவது: ஒரு இயக்குநரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வேண்டுமெனில் அதறகான பரிசோதனை முயற்சிக்கு ஒரு பெரிய நடிகர் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கரியரில் அப்படியானவர் கார்த்தி. அவருடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு பெருமை. மார்ச் அல்லது ஏப்ரலில் ரஜினி உடனான படம் தொடங்கும்.

இன்னும் ஓரிரு நாட்களில் ‘லியோ’ சக்ஸஸ் மீட்‌ குறித்த அப்டேட் வரும். படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது தயாரிப்பாளார் தொடர்புடைய விஷயம். மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வருகின்றன. அதையும் ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.

மேலும் லியோ படம் பார்த்து விஜய் என்ன சொன்னார் என கேட்டதற்கு, விஜய் ரொம்ப ஹாப்பியாக இருக்கிறார் என்றும், நான் தியேட்டர் விசிட்டின் போது காயமடைந்ததை அறிந்து போன் பண்ணி விசாரித்தார். இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை என கூறினார். அதுமட்டுமின்றி லியோ தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பண்ணிய கதை என்றும் அதில் தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் முடிந்தவரை அப்படியே படத்தை எடுத்துள்ளதாக கூறினார்

இறுதியாக கைதி 2 படம் பற்றி பேசிய லோகேஷ். இது நிச்சயம் ஸ்டிராங் ஆன படமாக இருக்கும் என கூறினார். மேலும் அதில் எல்லாருடைய பங்களிப்பும் கைதி 2-வில் ஸ்டிராங்கா இருக்கும் என்றும் லோகேஷ் ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார். இதனால் ஏற்கனவே எல்சியுவில் உள்ள ரோலெக்ஸ் சூர்யா, விக்ரம் கமல், லியோ தாஸ் விஜய் ஆகியோரின் கேமியோ இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைதி 2 படத்துக்கு அடுத்ததாக சூர்யாவை வைத்து தான் ரோலெக்ஸ் படம் பண்ண உள்ளதாகவும் லோகேஷ் அந்த விழாவில் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.