சமுதாயத்தை சீரழிக்கு பிக் பாஸ்… முகம் சுளிக்கும் முத்த விளையாட்டு…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் அமர்க்களமாய் ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தினசரி ஒரு பஞ்சாயத்தை கிளப்பி விடுகின்றனர். இந்த சீசன் 106 நாள் பயணம் ஆகும், மற்றும் இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்பதால் போட்டியாளர்களிடையேயான ரகளைகளும் பிரச்சினைகளும் இரு மடங்காக உள்ளது.

ஆம், இதனால் இந்த சீசன் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும், விறுவிறுப்பாகவும் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த முறை ஜூனியர் சீனியர் என அனைத்து வயதினரும் போட்டியாலர்கலாகக் களமிறங்கியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே பெரும் வாக்குவாதம், சண்டை வருவதுதான் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு. அந்த வகையில், இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் புதுபுதுப் பிரச்சினைகள், கிசுகிசுக்கள் மூலம், ரசிகர்களை நன்றாக என்டர்டெயின் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போட்டியாளர்களிடையே கடுமையான மோதலும் இருந்தது. இதனால் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. ஒரு பக்கம் சண்டை சச்சரவு என மக்களை என்ட்டர்டெயின் செய்து கொண்டிருக்கும் பிக்பாஸ், மற்றொரு பக்கம் இளம் போட்டியாளர்களால் காதல், முத்தம் என கிசகிசுவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்போது மற்றொரு காதல் ஜோடி அலப்பறை செய்து கொண்டிருக்கிறது. ஆம், ஐசு-நிக்சன் தான் அந்த ஜோடி. இருவரும் ஆரம்பத்திலிருந்து மிக நன்றாகத்தான் பழகி வந்தார்கள். .

எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பதை நிகழ்ச்சியில் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் நெக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இப்படி இருவரும் மாறி மாறி காதல் மழையைப் பொழிந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், சமீபத்திய எபிசோடில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள் இருவரையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில், ஓவியா – ஆரவ் இடையேயான மருத்துவ முத்தம், அடுத்தடுத்து வந்த சீசனில் பெண் போட்டியாளர்களிடையே அசல் கோலார் அத்துமீறியதாக எழுந்த புகார்,

பெண்கள் பற்றி நடிகர் சரவணன் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தது என பல சம்பவங்களை ரசிகர்கள் கண்டுள்ளனர். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது போன்றே, தற்போதைய சீசனிலும் கூட முத்தக் காட்சிகள் இடம் பிடித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதை பார்த்து பலரும் அட இப்படி இறங்கிவிட்டார்களா??டிஆர்பி கூட்டுவதற்காக இப்படி செய்கிறார்களா??அல்லது நிஜமாகவே இப்படி மாறிவிட்டார்களா??என பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.