முடிந்தது முன்னணி நடிகர்களின் சினிமா வாழ்க்கை… அன்புச்செழியன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.?

0

பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை, சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த பத்து வருடத்துக்குள் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் சம்பள உயர்வின் காரணமாக, அன்புச் செழியனின் இந்த பரிணாம வளர்ச்சி கடந்த 10 வருடத்திற்குள் தான் நடந்துள்ளது.

அன்புச்செழியன் எத்தனை கோடி வேண்டுமானாலும் முன்னனி நடிகர்கள் படத்திற்கு பைனான்ஸ் செய்ய தயாராக இருப்பதை அறிந்த ரஜினிகாந்த், விஜய், அஜித், போன்ற நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே சென்றனர். இந்நிலையில் தற்பொழுது அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்றோர் சுமார் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் பெரும்பாலான படத்திற்கு அன்புச்செலியன் தான் பைனான்சியர். தயாரிப்பாளர் யாரும் பெரும்பாலும் அவர்களின் சொந்த பணத்தில் படம் எடுப்பதில்லை. அன்புசெழியன் போன்ற பைனான்சியரிடம் பணம் பெற்று தான் படம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அன்புச் செழியன் தற்போது வருமானவரித்துறையில் சிக்கியுள்ள நிலையில், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது சினிமா துறையினர் மத்தியில் அச்சத்தில் ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அன்புசெழியனிடன் விசாரணை நடத்தி வரும் நிலையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருக்கக்கூடும், மேலும் வருமானவரித்துறை அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதை நன்கு அறிந்தவர் அன்புச்செழியன் என்பதால், அடுத்தடுத்து எடுத்து வைக்கும் அவரின் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நிச்சயம் உணர்ந்து இருப்பார்.

இந்த நிலையில் இனி வரும் காலங்களில் இதுவரை சம்பாரித்த பணத்தை பாதுகாப்பதில் தான் இவரின் கவனம் இருக்கும், புதியதாக சினிமாவில் முதலீடு செய்ய மாட்டார், அப்படி பைனாஸ் செய்தால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு மிக குறைந்த தொகையை மட்டும் பைனான்ஸ் செய்வார், பெரிய பட்ஜெட் படங்களுக்கு பைனாஸ் செய்தால் மாட்டி கொள்வோம் என்பதால், முன்னனி நடிகர்கள் படங்களுக்கு பைனான்ஸ் செய்யமாட்டார் அன்புசெழியன் என கூறப்படுகிறது.

இதனால் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரமாட்டார்கள் என கூறப்படுவதால், அன்பு செழியன் மீது நடந்த வருமான வரித்துறை சோதனையின் மூலம், முன்னனி நடிகர்களின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

டெல்லியில் இருந்து இறங்கிய ஸ்பெஷல் டீம்… கடும் பீதியில் சிவகுமார் குடும்பம்… பினாமி சிக்கியது எப்படி.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here