அப்பா நான் ஐஸ் பேசுறேன்… தொலைபேசியில் ரஜினி சொன்னா அந்த பதில்..!தேம்பி தேம்பி அழும் ஐஸ்வர்யா..

0
Follow on Google News

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் கடந்த ஜனவரி 17ம் தேதி பிரிவதாக அறிவித்துள்ள நிலையில். தனது மனைவி இரண்டு மகள்கள் என மொத்த குடும்ப உறுப்பினர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த விவாகரத்துக்கு பின்பே ரஜினிகாந்த் தனது வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி 17ம் தேதி அறிவித்த போது, இருவரும் ஹைதராபாதில் இருந்துள்ளனர். இதுவரை இருவரும் சென்னை திரும்பவில்லை. இருவரும் அவரவர் சினிமா வேலை காரணமாக ஹைதராபாதில் தனி தனியாக தங்கி அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தனுஷ் உடனான பிரிவு குறித்து அப்பா என்ன நினைக்கிறார் என அவ்வப்போது தொடர்ந்து அவருடைய தாயாரிடம் தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.

தந்தை தனது குடும்ப உறுப்பினர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும். தங்கை சௌந்தர்யா முதல் கணவனை விட்டு பிரிய முடிவு செய்த போது அவர் எளிதாக கடந்து விட்டார் ஆனால் உன்னுடைய இந்த விவகாரத்தில் அவர் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார், அவரை நெருங்க கூட எங்ககளால் முடியவில்லை என வீட்டில் நடக்கும் பிரச்சனையை பற்றி ஐதராபாத்தில் இருக்கும் மகள் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார் தாய் லதா.

இதனை தொடர்ந்து தனுஷ் உடனான பிரிவு அறிவிப்புக்கு பின் தந்தையை முதல் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார் ஐஸ்வர்யா. அப்பா நான் ஐஸ் பேசுறேன் எப்படி இருக்கீங்க என ஐஸ்வர்யா கேட்க..என்ன விஷயம் என நேரடியாக கேட்டுள்ளார் ரஜினி. அப்பா என் மீது கோபத்தில் இருப்பது தெரியும், எல்லாம் சரியாகி விடும், புருஞ்சுக்கங்க அப்பா என ஐஸ்வர்யா பேச. நீ எதும் என்னிடம் பேசாதே என உச்சகட்ட கோபத்துக்கு சென்ற ரஜினிகாந்த்.

மேலும், உன்னுடைய இரண்டு குழந்தைகள் பற்றி சிந்தித்தாயா. உன் அம்மாவுக்கு எனக்கு ஆயிரம் பிரச்சனை இருந்திருக்கும், சகித்து கொண்டு பிரியாமல் வாழ்ந்து வந்தேன் என்றால். என்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக தான். என்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என நினைத்திருந்தால், உங்களை போன்று என்றோ உன் அம்மாவை தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் நீங்கள் உங்களுடைய இரண்டு குழந்தைகளை பற்றி சிந்திக்கவே இல்லை.

என ரஜினிகாந்த் தனது கோபத்தை அறிவுரையாக கொட்டி தீர்த்துவிட்டார் என கூறப்படும் நிலையில், இனி என்ன பேச இருக்கிறது என தொலைபேசியையும் கட் செய்து விட்டாராம். இதனை தொடர்ந்து தந்தை தன்னிடம் பேசியதை தாயாரிடம் தொலைபேசியில் பேசி தேம்பி தேம்பி அழுதுள்ளார் ஐஸ்வர்யா. இதனை தொடர்ந்து அவசரப்பட்டு விட்டேன் என உணர்த்துள்ள ஐஸ்வர்யா மீண்டும் தனுஷ் உடன் இனைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.