சீமான் – விஜயலக்ஷ்மி பஞ்சாயத்தை நேரில் விசாரித்து தீர்ப்பு சொல்ல தயாராக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்னன்..

0
Follow on Google News

கிராம உதயம் அமைப்பின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பாக சேவை புரிந்தவா்களுக்கு அந்த அமைப்பின் சாா்பில் அப்துல் கலாம் விருது, 2000 பேருக்கு மரக்கன்று- மஞ்சள் பை வழங்கும் விழா, தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து மரக்கன்றுகள், விருதுகளை வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்,

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவத, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வளா்ந்த நாடுகளை விடக் குறைவாகவே உள்ளன. தற்போது மீடியா, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் இந்தக் குற்றங்கள் வெளியே தெரிகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீா்வாகாது. மன அழுத்தத்தால் இளம் வயது சிறுமிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை மாறவேண்டும்.

வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் எதிா்த்து போராடக்கூடிய மனநிலையை உருவாக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடந்த சிறப்பு கூட்ட தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த மசோதா குறித்தும் கருத்து தெரிவித்த இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் இது வெறும் பேப்பரில் மட்டுமே இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும். பதவியில் இருக்கும் பெண்களுக்கு பின்னால் அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு இல்லாமல் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீமான், விஜயலட்சுமி பிரச்சனையை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார். தன்னை ஏமாற்றி 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலக்ஷ்மி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்து, அதற்காக திருவள்ளுர் மகிளா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தையும் அளித்தார்.

இது பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், நாம் தமிழர் சீமானும் தனது பக்க விளக்கங்களை இந்த புகாரில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், சில தினங்கள் முன்பு தான் அளித்த புகாரை திரும்ப பெற்ற விஜயலக்ஷ்மி மீண்டும் பெங்களூரு சென்றார். ஆனால் தற்போது மீண்டும் சீமானுக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் இது தான் எனது கடைசி வீடியோ என்றும் , இதற்கு அடுத்து நான் சாப்பிடப்போவது இல்லை, நான் சாக போகிறேன் என்றும், நான் செத்தால் அதற்கு சீமான் தான் காரணம் என்றும் கூறி உள்ளார்.

தற்போது இந்த விவகாரங்கள் குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகையும், தொகுப்பாளினியும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சம்பந்த பட்ட நபர்கள் என்னிடம் வந்து கேட்கும் போது அதனை பற்றி பேசலாம். அவர்கள் இல்லாத போது இதனைப் பற்றி பேசக்கூடாது. என்னுடைய நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களின் அனுமதியுடன் தான் பேசுவோம். எனவே அவர்கள் என்னிடம் வந்து பேசினால் உரிய ஆலோசனைகள் வழங்கலாம். அவ்வாறு இல்லாத போது இந்த விவகாரம் பற்றி பேசக்கூடாது, சீமான் – விஜயலட்சுமி விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் கேமரா முன்பு வந்து பேசினால் என்னுடைய ஆலோசனையை வழங்குவேன்” என்று பேசியுள்ளார்.