அண்ணாத்த களநிலவரம் அறிந்த ரஜினி… அடுத்த படத்துக்கு சம்பளம் குறைப்பு!

0
Follow on Google News

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்தது சன் பிக்சர்ஸ். இந்த படத்தின் மூலம் வசூலை அள்ள தீபாவளி நாளில் அதிக திரைகளில் ரிலீஸ் செய்தது. முதல் நாளும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் வசூல் அடுத்தடுத்த நாட்களில் படுத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் பெய்த கனமழையால் தியேட்டர்களில் ஈயாடவில்லை. திரையரங்க உரிமையாளர்களே அடுத்த படங்கள் எப்போது ரிலிஸாகும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் இதுவரை ரஜினி படத்துக்கு இல்லாத அளவில் மோசமான வசூல்தான் உள்ளதாம். இதுவெல்லாம் ரஜினிக்கு தயாரிப்பு நிறுவனம் மூலம் செல்ல, இப்போது அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ்க்கே நடிக்க முடிவு செய்த ரஜினி சம்பளத்தையும் 30 சதவீதம் குறைத்துக் கொள்ள சம்மதித்துள்ளாராம். அண்ணாத்த படத்துக்காக ரஜினி 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.