பெண் பித்து பிடித்தவர்களா தமிழ் மன்னர்கள்.. ஒவ்வொரு தமிழனுக்கு ஏற்பட்ட அவமானம்..

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன், இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரம் திகழ்கிறது, ஆதித்யா கரிகாலனான விக்ரம் இளம் வயதில் நந்தினியை காதலிக்கிறார், பின்பு இருவரும் பிரிந்து விடுகிறார்கள், அணல் ஆதித்த கரிக்கலனான விக்ரம் தன்னுடைய காதலி நந்தினியான ஐஸ்வர்யா ராய் நினைவிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒரு போர்க்கள காட்சியில் ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிக ஆக்ரோஷமாக இந்த கல்லும், இந்தப் பாட்டும் ரத்தமும் போர்க்களமும் எல்லாமே அதை மறக்கத்தான்… அவளை மறக்கத்தான்… என்னை மறக்கத்தான் என தன்னுடைய காதலியை மறப்பதற்காக தான் இந்த போர்க்களம் என்பது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நந்தினி ஆதித்ய கரிகாலன விக்ரமை பழி தீர்ப்பதற்காகவும் சோழ சாம்ராஜ்யத்தை சிதைப்பதற்காகவும் வயதானவரான பழுவூர் மன்னர் பழுவேட்டையாரை திருமணம் செய்து கொள்கிறார், சோழ மன்னர் சுந்தர்ராஜ சோழனின் முக்கிய தளபதிகளின் ஒருவரான பழுவேட்டையாரான சரத்குமாரை தன்னுடைய அழகில் மயக்கி மோகத்தால் வீழ்த்தி தனது கை பாவையாக வைத்துக் கொள்கிறார் நந்தினியான ஐஸ்வர்யா ராய்.

பழுவேட்டையரும் நந்தினி மீது உள்ள மோகத்தால் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார். இதில் என்ன ஒரு கூத்து என்றால் பழுவேட்டையார் விக்ரமனின் பாட்டனாரும் கூட, அப்படியானால் பேரனை காதலித்த நந்தினி ஐஸ்வர்யாராய் தாத்தா பழுவேட்டையாரை திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்று தானே அர்த்தம். இதேபோன்று நந்தினி தாயார் மந்தாகினியை யார் என்கின்ற ஒரு பரபரப்பு ஒரு கட்டத்தில் நிகழ்கிறது.

அதில் ஆதித்ய கரிகாலனின் தந்தை சுந்தர்ராஜ சோழனின் காதலி மந்தாகினி என்றும் மந்தாகினிக்கும் சுந்தர்ராஜ சோழனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை அறிந்து இதை நேரடியாக தன்னுடைய தந்தை சுந்தர்ராஜ சோழனிடம் மகள் குந்தவையான திரிஷா கேள்வி எழுப்புகிறார். அப்போது சுந்தரராஜ சோழன் ஒரு தனி தீவில் இளம் வயதில் இருந்த போது மாந்தாகினியை பார்த்ததாகவும் அவரை காதலித்ததாகவும் மகள் குந்தவையிடம் தெரிவிக்கிறார்.

என்னடா இது தந்தை சுந்தர்ராஜ சோழன் மாந்தாகினியை காதலித்துள்ளார், மகன் ஆதித்யா கரிகாலன் மாந்தாகினி மகளை காதலிக்கிறான், இப்படியெல்லாமா மன்னர்கள் அந்தக் காலத்தில் இருந்தார்கள் என்கின்ற பெரும் குழப்பம் படம் பார்ப்பவர்களுக்கு நீடிக்கிறது. பின்பு மாந்தாங்கிணிக்கு பிறந்த ஐஸ்வர்யாவின் தந்தை சுந்தர்ராஜசோழனா.? அப்படியானால் நந்தினி தன்னுடைய சகோதரியா என்கின்ற சந்தேகம் திரிஷாவுக்கு எழுகிறது.

அப்படியானால் ஆதித்ய கரிகாலனுக்கும் நந்தினி சகோதரியாக தானே இருக்க முடியும், சகோதரியைத் தான் ஆதித்த கரிகாலன் காதலித்தாரா என்கின்ற கோணத்திலும் கதை நகர்கிறது. பின்பு தான் குந்தவையான திரிஷாவுக்கு உண்மை தெரிய வருகிறது, மாந்தாகினிக்கு பிறந்த நந்தினியின் தந்தை பாண்டிய மன்னர் வீரபாண்டி என்றும், மாந்தாங்கிணியை வீரபாண்டியர் கடத்திச் சென்று வைத்திருந்த போது மாந்தாங்கினிக்கும் – வீரபாண்டியர்க்கும் பிறந்தவர் தான் நந்தினி என்பது தெரியவருகிறது.

எப்படி ஆதித்ய கரிகாலனான விகாரம் காதலி நந்தினியை நினைத்து உருகுறாரோ.? அதேபோன்று மகனின் காதலியின் அம்மாவான தன்னுடைய பழைய காதலி மாந்தாகினியை நினைத்து சுந்தர்ராஜ சோழனும் உருக்குவதாக மகள் குந்தவையிடம் தெரிவிக்கிறார். இறுதியில் நந்தினி ஆதித்ய கரிகாலனை கொலை செய்வதற்காக சூழ்ச்சி செய்து கடம்பூர் வரவழைக்கிறார்.

ஆனால் நந்தினியின் சூழ்ச்சி அறிந்தே ஆதித்ய கரிகாலன் கடம்பூர் செல்கிறார், நந்தினி ஆதித்யா கரிகாலனை கொலை செய்ய வரும்பொழுது ஆதித்யா கரிகாலனான விக்ரம் தன்னுடைய காதலி கொலை செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்கிறார். இறுதியில் நந்தினி கொலை செய்ய தயங்கிய போது தன்னுடைய கத்தியை காதலி நந்தினி கையில் கொடுத்து அவர் கையைப் பிடித்து தன்னைத்தானே குத்திக்கொண்டு தன்னுடைய காதலியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மரணம் அடைகிறார் ஆதித்ய கரிகாலனான விக்ரம்.

ஆக மொத்தத்தில் தமிழனை பெருமை அடைய செய்கிறோம் என்கிற பெயரில், பெண் மீது கொண்ட மோகத்தினால், பெண் மீது கொண்ட காதலினாலும் சுருக்கமாக சொன்னால் பெண் மீது கொண்ட போதையில் தான் அந்த கால தமிழ் மன்னர்கள் இருந்தது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் எப்படி தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும், இப்படி ஒரு படம் தேவை தானா என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி,RRR பக்கத்தில் கூட போக முடியாது… மணிரத்தினம் என்ன படம் எதுத்து வெச்சுருக்கார்..