கதையில் மணிரத்தினம் செய்த குழப்பம்.. இப்படியா சல்லி சல்லியா உடைப்பது…

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டு திரையில் தற்பொழுது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிற படம் பொன்னியின் செல்வன் பாகம் 2, இதற்கு முன்பு பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது, இருந்தும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் தான் படத்தின் கதைகள் மற்றும் முக்கிய காட்சிகள் எடுக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் எதிர்பார்த்து படம் பார்க்க சென்றவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் மணிரத்தினம். கல்கி எழுதிய பொன்னியின் செல்வத்தில் இடம்பெற்ற சில பாத்திரங்களே கல்கியின் கற்பனையானவை, ஆனால் மணிரத்தினம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையிலே பல மாற்றங்களை செய்து பல்வேறு குழப்பத்தை செய்து விட்டார்.

அருள் மொழி வர்மன் உயிரோடு இருக்கின்ற செய்தி அறிந்து ஆதித்ய கரிகாலன் மற்றும் குந்தவை இருவரும் நாகப்பட்டினம் சென்று பார்க்கின்ற காட்சிகள் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறாதவை, இது மணிரத்தினத்தின் செருகல் தான், மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கந்தமாறன், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்களை மணிரத்தினம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அதேபோன்று பூங்குழலி போன்றவர்கள் மீது மணிரத்திற்கு என்ன கோபமோ தெரியவில்லை, இரண்டாம் பாகத்தில் அவர்கள் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஒரு சில சீன்களில் மட்டுமே வந்து செல்கிறார்கள். மேலும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டில் கடைசி நிமிடங்களில் கதையின் கருவிலே கை வைத்து விட்டார் மணிரத்தினம்.

சோழர்களின் உண்மையான வாரிசு சேத்தன் அமுதன் தான் என்பதை கல்கியின் நாவலில் இடம்பெற்று இருந்த நிலையில், சேர்த்ன் அமுதன் அரசனாக அமரும் பொழுது பூங்குழலி ராணியாக முடிசூட்டி இருப்பார், ஆனால் மதுராந்தர் திருந்தி விட்டது போன்று கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து மதுராந்தரை சோழ நாட்டை ஆளும் ராஜாவாகும் வகையில் கதையை மணிரத்தினம் மாற்றி இருக்கிறார்.

ஆனால் கல்கியின் கதைப்படி நந்தினியும் மதுராந்தகம் இரட்டைக் குழந்தைகள் இதை மறைத்து மணிரத்தினம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலிலே சில மாற்றங்களை கொண்டு வந்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு படம் பார்க்கச் சென்றவர்களை மிகப்பெரிய கோபமடைய செய்துவிட்டார் மணிரத்தினம்.