ரஜினிக்கு அவர் பணியிலே வெச்சு செஞ்ச விஜய்… அனல் பறக்க விஜய் கொடுத்த பதிலடி…

0
Follow on Google News

வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் சரத்குமார் பேசிய சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் தொடங்கிய ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல் ஜெயிலர் படம் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியதற்கு பின்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் விஜய் தான் சூப்பர் ஸ்டார், என ரஜினியை சீண்டும் வகையில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக சிலர் கூவி வந்த நிலையில், விஜய் மௌனமாக இருந்தது, அதை அவரே ரசிப்பது போன்று இருந்தது.

ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற ரஜினி, ஜெயிலர் பட ஆடியோ வெளியிட்டு விழாவில் காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சிறிய மிருகங்கள் சீண்டிக் கொண்டே இருக்கும். காக்கா, கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். கழுகு எப்போதும் அமைதியாக இருக்கும். கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும். ஆனால் அதன் இறக்கையை கூட காக்கா வால் தொட முடியாது. உலகின் உன்னதமான மொழி மவுனம் என ரஜினிகாந்த் தான் கழுகு , விஜய் காக்கா என மறைமுகமாக பேசி இருந்தார்.

இதன் பின்பு ரஜினி – விஜய் இடையிலான மோதல் மிக பெரிய அளவில் வெடித்த நிலையில், லியோ ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினிக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், விஜய் ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்டது, இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் விஜய் என்ன பேச போகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்.

வாரிசு பட ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய்யை சரத்குமார் சூப்பர் ஸ்டார் விஜய் தான் என உசுப்பேத்தி விட்டது போன்று லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ரத்தினகுமார் விஜய் மனதை குளிர் வைக்கும் வகையில் எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என ரத்ன குமார் பேசியது ரஜினிகாந்தை தான் குறிப்பிட்டு சொல்கிறார் என எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.

இதனை தொடர்ந்து ரத்தினகுமார் பேச்சை தொடர்ந்து அடுத்து வந்த விஜய், ரஜினியின் காக்கா – கழுகு கதைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குட்டி கதையை சொன்னார், அதில், ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு சென்றனர். அந்த காட்டில் யானை, மயில் இந்த காக்கா, கழுகு ….என்று விஜய் குட்டி கதை சொல்ல தொடங்கியதுமே அரங்கமே சத்தத்தால் அதிர ஆரம்பித்தது.

பின்னர் தொடர்ந்து பேசிய விஜய், “காடு என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்பதால் கூறினேன். காட்டுக்கு சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் வில்-அம்பு ஒருவர் எடுத்து சென்றார், ஒருவர் ஈட்டி எடுத்து சென்றார். வில்-அம்பு எடுத்துச்சென்றவர் முயலை வேட்டையாடி எடுத்து சென்றார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு சென்றார். இதில் யார் வெற்றிபெற்றவர்?

யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். உங்கள் இலக்கை பெரிதாக வைத்து அதையை நோக்கி நாம் செல்ல வேண்டும்.. பாரதியார் சொல்வது போல் பெரிதும் பெரிது கேள்.. பெரிதாக கனவு காணுங்கள். “Small aim is crime” என கலாம் கூறியுள்ளார். எனவே பெரிதாக கனவு காணுங்கள்.” என்று விஜய் பேசியது, அதாவது காக்கா கழுகை விட உயர பறக்க நினைக்கும் ஆனால் அதனால் முடியாது என ரஜினி இதற்கு முன்பு பேசியதற்கு,

அதே மிருகங்கள் கதையை சொல்லி இலக்கை பெரிதாக வைத்து அதை நோக்கி செல்ல வேண்டும் என விஜய் பேசியது, ரஜினிக்கான பதிலடியாக அமைத்தது குறிப்பிட்டத்தக்கது. மேலும் லியோ வெற்றி விழா மேடையில் பல நேரங்களில் ரஜினி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக ரஜினியை ஊம குத்து குத்துவது போன்று பேச்சுக்கள் அமைந்திருந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ரஜினியின் கழுகு – காக்கா கதைக்கு விஜய் கொடுத்துள்ள பதிலடி பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.