விஜய்யால் லோகேஷ் சினிமா வாழ்க்கையை போச்சு… ரஜினி தான் காப்பாத்தணும்…

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ படம் பல்வேறு நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதி இருந்த அளவுக்கு இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் செய்திருந்தால், லியோ திரைப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என வருத்தத்துடன் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்களே லியோ படத்துக்கு வெறும் 3.25 ஸ்டார்கள் தான் கொடுத்துள்ளனர்.

எல்சியூ கனெக்ட்டும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக கேமியோ இல்லாமல் போன நிலையில், இரண்டாம் பாதி லியோ கர்ஜிக்காமல் காலை வாரி விட்டுள்ளது. இதனால் லோகேஷின் கேரியர் காலி ஆகி விட்டது அதற்குக் காரணம் விஜய் தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ஏற்கனவே பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சனின் சினி வாழ்க்கையை காலி செய்து இருந்தார்.

இருப்பினும் நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வாய்ப்பினை கொடுத்து அவரை மீண்டும் டாப்புக்கு கொண்டு வந்தார். ஜெயிலர் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இருவருமே சினி துறைக்கு கம்பேக் கொடுத்தனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அந்த வகையில் ஜெயிலர் வசூல் சாதனையை லியோ முறியடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது, லியோ படத்தின் மூலம் மிக பெரிய சரிவை சந்தித்துள்ள லோகேஷ் கனகராஜ். அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினி நடிக்கும் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனக்ராஜ் இயக்குகிறார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இரட்டையர்களான அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் லோகேஷ் கனகராஜின் LCU-வில் வருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.

“நிச்சயமாக ரஜினி 171’ தனிப் படம் தான். அது LCU-வில் வராது. அதில் எந்த குழப்பமே வேண்டாம். என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. இது அப்படியான ஒரு படமாக இருக்கும். என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர்களிடம் படத்தில் கமிட்டாகி வரும் விஜய், அவர்களை சுதந்திரமாக படம் எடுக்க விடாமல் கதையில் பல குழப்பங்களை செய்து, அந்த படத்தையே நாசம் செய்து விடுகிறார் விஜய், இதனால் சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் சினிமா கேரியரை முடிவுக்கு வந்து விடுகிறது, இப்படி நெல்சன் சினிமா கேரியரை பீஸ்ட் படத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார் விஜய், ஆனால் நெல்சன் மீது உள்ள நம்பிக்கையில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் வாய்ப்பு கொடுத்து நெல்சனுக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தார்.

தற்பொழுது வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த லோகேஸ் கனகராஜ் சினிமா கேரியரையும் காலி செய்யும் வகையில் அமைத்துள்ளது விஜய்யின் லியோ படம், ஆனால் நெல்சனுக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது போன்று லோகேஷ் கனகராஜுக்கு ரஜினிகாந்த் கொடுக்க தயாராக உள்ளார், அந்த வகையில் வெற்றி பட இயக்குனர்கள் இனி விஜய்யை வைத்து படம் எடுப்பதற்கு முன்பு நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ்க்கு என்ன நடந்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.