பிரதீப் ரங்கநாதன் உடன் ஜோடி சேரும் சங்கர் மகள்… சிம்பு நடிக்க வேண்டிய படம்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். சங்கரின் இரண்டு மகள்களும் டாக்டர் படித்தவர்கள், இதில் மூத்த மகள் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்தவுடன், மருத்துவர் தொழிலுக்கு செல்லாமல் அவருடைய நீண்ட நாள் ஆசையான சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் தனது மகளை சங்கர் சினிமாவில் நடிக்க சம்மதிக்கவில்லை. இருந்தும் மகளின் பிடிவாதம் மற்றும் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஆசைக்கு ஒரு படம் நடிக்க சம்மதித்தார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கும் விருமன் படத்தில் நடிகையாகும் வாய்ப்பு அதிதி சங்கருக்கு கிடைத்தது. முத்தையா படம் கவர்ச்சிகள் இருக்காது, மேலும் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதாபாத்திரம் இருக்கும்.

அதே போன்று நடிகர் கார்த்திக் எந்த ஒரு நடிகையோடும் கிசு கிசுவில் சிக்காதவர். இதன் காரணமாக தன்னுடைய மகளை விரும்பன் படத்தில் நடிக்க சம்மதித்தார் சங்கர். விருமன் படம் நடித்து கொண்டிருக்கும் போதே, அதிதி சங்கர் அடுத்த படத்திற்கான கதையை கேட்க தொடங்கினார். சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் கொரோனா குமார் படத்தின் கதை கேட்டு கமிட் ஆனார் அதிதி சங்கர்.

இந்நிலையில் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் படம் பல்வேறு பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டது. அதன் பின்பு தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி சங்கர். இந்நிலையில் ஏற்கனவே கொரானா குமார் படத்தில் கமிட்டாகி கைவிடப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது அதே படத்தை நடிகர் சிம்புவுக்கு பதில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .