பாவம்யா விஜய்… எந்த பக்கம் போனாலும் ஆப்பு வைக்கும் உதயநிதி.. லியோ படத்திற்கு புதிய சிக்கல்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துணிவு. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிட்டது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன் மூவிஸ். இதேபோன்று நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிடுவதற்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் முயற்சி செய்தது.

ஆனால் உதயநிதி மீது இருந்த முன் விரோதம் காரணமாக எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னுடைய வாரிசு படத்தை ரெட் ஜெயின்ஸ் மூவிஸ் வெளியிடுவதற்கான உரிமையை தரக் கூடாது என்று விஜய் தயாரிப்பாளருக்கு கடிவாளம் போட்டு விட்டார். இந்த நிலையில் வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் துணிவு படத்தை களம் இறக்க முடிவு செய்த ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் நடிகர் விஜய்க்கு மிக பெரிய நெருக்கடியையும் கொடுத்தனர்.

மேலும் விஜய் உடன் அஜித்தை நேரடியாக மோதவிட்டு, இதுவரை விஜய் தான் நம்பர் ஒன் வசூல் நாயகன் என்கின்ற ஒரு பிம்பத்தை உடைத்து எரிந்து, விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்துள்ளது ரெட் ஜெயன்ட் மூவிஸ். இந்நிலையில் இருந்தும் வாரிசு படத்துடன் இந்த பிரச்சனை முடியும் என்று பார்த்தால், அடுத்தடுத்து நடிகர் விஜய் எந்த பக்கம் போனாலும் சுற்றி கேட் போட்டு வருகிறார் உதயநிதி என்கிறது சினிமா வட்டாரங்கள்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் இந்தியன் 2. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இயக்குனர் சங்கருக்கு பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கிக் கொடுத்த படம் இந்தியன்.

அந்த வகையில் இந்தியன் 2 படத்தை காண எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையில், தன்னுடைய அடுத்த படைப்பு மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக வேலை செய்து வருகிறார் சங்கர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் இனைந்து தயாரிக்கிறது, வரும் தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் 2 வெளிய வருவதற்கான தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகைக்கு 2 அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு லியோ படம் வெளியாக இருப்பது தான் என்றும்.

அதாவது லியோ படம் வெளியாகி அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்தியன் 2 வெளியாகும் பட்சத்தில் லியோ படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் திரையரங்கு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும் என்பதால் அந்தப் படத்தின் வசூலும் பாதிக்கப்படும், அந்த வகையில் ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்துடன் நேரடியாக மோதிய விஜய் நடித்த வாரிசு படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்க முடியவில்லை.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு ஆப்பு வைக்கும் விதத்தில் இந்தியன் 2 ரிலீஸ் ஆவது விஜய்க்கு மட்டுமல்ல லியோ பட குழுவினருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது. வாரிசு உடன் நேரடியாக துணிவு படத்தை மோத விட்டதில் பின்னணியில் ரெட் ஜெய்ன்ட்ஸ் மோவிஸ் உதயநிதி தான் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், லியோ படத்திற்கு ஆப்பு வைக்கும் விதத்தில் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் வெளியாகும் இந்தியன் 2 படத்தை லியோ வெளியான அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது பின்னனியில் உதயநிதி தான் என சினிமா வட்டாரதத்தில் கூறப்படுகிறது.