நீ நடித்து கிழித்தது போதும்… மகள் போக்கு சரியில்லை.. சங்கர் அதிரடி முடிவு..! என்ன தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபாலி படம் வெளிவரும் வரை, இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என கொண்டாடப்பட்டு வந்த இயக்குனர் சங்கர், பாகுபலி படம் வெளியான பின்பு அந்த பிரமாண்ட இயக்குனர் என்கிற அடையாளத்தை இழந்தார். மேலும் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ரோபோ 2.0 படுதோல்வியை தழுவியது, அடுத்து அவர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த சங்கர் மிக பெரிய சரிவை சந்தித்து தத்தளித்து வருகிறார். இந்நிலையில் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி மருத்துவராக படித்து சமீபத்தில் மருத்துவ பட்டம் பெற்றுள்ளார். இவருக்கும் நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க ஆசை. அனல் தந்தை சங்கர் அனுமதிக்க வில்லை.ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என தந்தையை நச்சரித்து அனுமதியை பெற்றார் அதிதி.

மகள் நடிக்கும் முதல் படத்தின் கதையை தந்தை சங்கர் தேர்வு செய்துள்ளார். கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி போன்ற கிராமத்து கதையம்சம் கொண்ட இயக்குனர் முத்தையா மீண்டும் கிராமத்து கதையில் புதிய படத்தை நடிகர் கார்த்திக் நடிப்பில் எடுத்து வருகிறார். முத்தையா படம் கிளாமர் காட்சி இருக்காது, மேலும் நடிகர் கார்த்திக் எந்த ஒரு நடிகையிடம் கிசு கிசுவில் சிக்காதவர்.

இப்படி பல முக்கிய காரணங்களால் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக விருமன் படத்தில் தனது மகள் அதிதியை சினிமாவில் நடிக்க பச்சை கொடி காட்டினார் சங்கர். விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மகள் ஆசைக்காக சினிமாவில் நடித்தாலும் சங்கருக்கு அதில் துளியளவும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தந்தைக்கு விருப்பம் இல்லை என்றாலும், தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் அதிதி. அந்த வகையில் தந்தை விருப்பம் இல்லாமல் நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் கொரோனா குமார் படத்தின் கதையை கேட்டு அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படம் தற்பொழுது அதிதி நடிக்கும் விருமன் படம் படபிபிடிப்பு , சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் கொரோனா குமார் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் தந்தை அனுமதியில்லாமல் கொரோனா குமார் படத்தில் அதிதி நடிக்க ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நீ நடித்து கிழித்தது போதும் என மகள் அதிதிக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க மாப்பிளை பார்க்கும் வேளையில் தீவிரமாக சங்கர் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளநிலை மருத்துவம் படிப்பை முடித்துள்ளா அதிதி மருத்துவ துறையில் கவனம் செலுத்தட்டும் என தந்தை சங்கர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த விஷயத்தில் தனுஷை விட மோசம் ரஜினி..! மதுபோதையில் நட்சத்திர ஓட்டலில் மனைவியிடம் சிக்கிய ரஜினி..!