மணிரத்தினம் செய்தது பிழை இல்லை..தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி.. பின்னணி காரணம் என்ன.?

0
Follow on Google News

தமிழ் இனம் இருக்கும் வரை இராஜராஜ சோழனின் புகழை மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது, அதே போன்று தமிழ்ர்களின் வரலாறு எழுத வேண்டும் என்றால் ராஜராஜ சோழனை தவிர்த்து அந்த வரலாற்றை எழுதவும் முடியாது, அப்படிப்பட்ட தமிழர்கள் கொண்டாட கூடிய ராஜ ராஜ சோழன் மற்றும் சோழ மன்னர்களை இழிவுபடுத்தும் வகையில் மணிரத்தினதின் பொன்னியின் செல்வன் அமைந்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ரவிதாசன், சோமன், பரமேசன், தேவதாசன் இந்த நான்கு பேர்களால் தான் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் மதுராந்தர் ஆட்சிக்குப் ஆட்சிக்குப் பின்பு அதாவது ஆதித்ய கரிகாலன் இறந்து 14 ஆண்டுகளுக்கு கழித்து ஆட்சிக்கு வந்த அருள்மொழிவர்மன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த இந்த நால்வரை அடித்து நாடு கடத்துகிறார், அப்படி நடைபெற்ற போர் தான் காந்தனூர் சாலை போர்.

அதாவது இன்று இருக்கும் திருவனந்தபுரம் அதுதான் காந்தநல்லூர் சாலை, அந்த காந்தனூர் சாலை வரை தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொலை செய்தவர்களை அடித்து விரட்டியவர் ராஜராஜ சோழன், ஆனால் இப்படி ஒரு சம்பவத்தை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலினும் மறைத்து விட்டார். அதேபோன்று மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மறைத்து விட்டார்.

மேலும் ஆதித்ய கரிகாலனை கொலை செய்தவர்களை மறைத்து விட்டு கல்கி அவர் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்ய கரிகாலன் எப்படி கொலை செய்தார் என்பதை வெளிப்படுத்தாமல் ஒரு மர்மமாக முடித்து இருப்பார். ஆனால் நந்தினி என்கிற கற்பனை கதாபாத்திரம் தான் ஆதித்ய கரிகாலனை கொலை செய்தது போன்று சுற்றி வளைத்து தெரிவித்து இருப்பார் கல்கி.

ஆனால் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் எப்படி இறந்தார் என்கிற மர்மத்துக்கு விடை கொடுப்பர் மணிரத்தினம், ஆதித்த கரிகாலனை கொலை செய்த ரவிதாசன், சோமன், பரமேசன், தேவதாசன் ஆகிய நான்கு நபர்களையும் திரையில் அம்பலப்படுத்துவர் மணிரத்தினம் என பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்த பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், ஆதித்ய கரிகாலன் தற்கொலை செய்தது போன்ற காட்சி அமைத்து மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்து விட்டார் மணிரத்தினம். இதில் ஜெயன் மோகன் மற்றும் மணிரத்தினமும் இணைந்து ஒரு திரைப்படம் எடுத்தால் தமிழர்களுக்கு எதிராக எப்படி கதைகளை சித்தரிப்பார்கள் என்பதற்கு ஆதித்ய கரிகாலன் மரணம் அடைந்த அந்த காட்சியை சான்று என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இதில் சோழ மன்னர்களின் வரலாற்றை படிக்காதவர்கள், நேரடியாக சென்று மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும் பொழுது, ஆதித்யகாரிகாலன் தற்கொலை செய்து தான் மரணம் அடைந்தார் என்கின்ற ஒரு தவறான வரலாற்றை அவர்கள் மனதில் பதியும், மேலும் ஆதித்ய கரிகாலன் நந்தினியை நந்தினிக்காக உயிர் விடுவதால் அவரை ஒரு பெண் பித்தர் போன்றும்.

அதே போன்று வந்தியத்தேவன் எந்த பெண்ணைப் பார்த்தாலும் வழிந்து பேசுவது போன்று காட்சி அமைத்து அவர் ஒரு பெண் மோகம் கொண்டவர் போன்றும். அதேபோன்று பார்த்திபன் பல்லவன் நந்தினி மீது மோகம் கொண்டவர் போன்று அவரையும் பெண் மோகம் கொண்டவர் போன்று காட்சி அமைத்துள்ள மணிரத்தினம். இதனால் ஒட்டுமொத்த தமிழ் மன்னர்களும் பெண்கள் மீது மோகம் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளார்.

கற்பனை கதாபாத்திரமான நந்தினி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி தமிழர்கள் பெண் பித்தர்கள் தமிழ் மன்னர்கள் பெண் மீது மோகம் கொண்டவர் போன்ற மணிரத்தினத்தின் காட்சி அமைப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்துமே பிழை அல்ல திட்டமிட்டு தமிழர்களுக்கு இது தான் வரலாறு என தவறான வரலாற்று திரிப்பை தான் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார், மணிரத்தினம் தமிழர்களுக்கே ஆபத்தானவர் என்கிறனர் தமிழ் ஆர்வலர்கள்.