இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். சோழ மன்னர்களின் வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் படத்தை முதலில் விநியோக முறையில் விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா முடிவு செய்தது.
இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பொன்னியின் செல்வன் படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட்க்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக முறையில் வெளியிட்ட விக்ரம் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, முறையான கணக்கை காட்டி தயாரிப்பாளருக்கு சேர வேண்டிய பணத்தை கொண்டு சேர்த்தனர் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
இதே ஃபார்முலாவை பின்பற்றி பொன்னியின் செல்வன் படத்தையும் விநியோக முறையில் விற்பனை செய்ய லைக்கா நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் விநியோக முறையில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட்டால், அந்த படத்தின் வசூலில் 10% எடுத்துக் கொண்டு, மீதமுள்ள தொகையில் 70 சதவீதம் லைக்கா நிறுவனத்திற்கும், 30 சதவீதம் மணிரத்தினத்திற்கும் கொடுக்கப்படும்.
ஒருவேளை பொன்னியின் செல்வன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறினால், சமீபத்தில் வெளியான கோப்ரா போன்று படுதோல்வி அடைந்து, படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் விநியோக முறையை கைவிட்டு அவுட்ரேட் முறையில் விற்பனை செய்யலாம் என்று மணிரத்தினம் பிடிவாதமாக இருந்ததால். இந்த படத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வெளியேறியது.
அவுட் ரேட் விற்பனை என்றால் படத்தை விநியோகஸ்தருக்கு ஒரு தொகையில் விற்பனை செய்து விடுவார்கள். இதனால் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு முழு பணமும் வந்துவிடும். அதன் பின்பு லாபம், நஷ்டத்தை அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும், இதுதான் அவுட் ரேட் முறையில் படத்தை விற்பனை செய்வது. இதனால் அவுட்ரேட் முறையில் விற்பனை செய்தால் படம் வெளியாவதற்கு முன்பே பெரும் லாபத்தை பார்த்து விடலாம்.
ஆனால் மணிரத்தினத்தின் தப்பான கணக்கினால் பொன்னியின் செல்வன் படத்தை பிற மொழிகளில் விற்பனையானாலும் கூட, தமிழ்நாடு திரையரங்குகளில் இந்த படத்தை வாங்கி வெளியிடுவதற்கு எந்த ஒரு விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை. இதனால் மிகக் குறைந்த திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
படம் நன்றாக இருந்திருந்தால் மணிரத்தினம் விநியோக முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருப்பார். ஆனால் அவருக்கே பொன்னியின் செல்வன் படத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான் விநியோகஸ்தர்கள் தலையில் கட்டி விட்டு அவர் எஸ்கேப் ஆகிவிடுவோம் என்கின்ற முடிவில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட விநியோகஸ்தர்கள் யாரும் பொன்னியின் செல்வன் படத்தை விலைக்கு வாங்கி வெளியிட முன்வரவில்லை.
இதனால் மிகக் குறைந்த திரையரங்குகள் மட்டுமே இதுவரை பொன்னியின் செல்வன் படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகும் தனுஷ் நடிக்கும் நானே ஒருவன் படத்தின் வியாபாரம் மிக ஜோராக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது, இதனால் மணிரத்தினம் அவுட் ரேட் முறையில் விற்பனை செய்யலாம் என்று எடுத்த ஒரு முட்டாள்தனமான முடிவு தான் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் வியாபாரம் மந்தமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.