ஆணவத்தில் திமிராக நடந்து கொண்டு நடுத்தெருவுக்கு வரும் சிவாங்கி… பாதியிலே நின்ற படப்பிடிப்பு..

0
Follow on Google News

காமெடி நடிகைகளுக்கு சமீப காலமாக தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நடிகை மனோரமா அதன் பின்பு நடிகை கோவை சரளா,இந்த இரண்டு நடிகைகளுக்கு அடுத்தபடியாக எந்த ஒரு நடிகைகளும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கவில்லை. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் பெண் நடிகைகள் தட்டுப்பாடு காரணமாக, சிறந்த காமெடி நடிகைகள் தங்கள் கதாபாத்திரத்துக்கு பொருத்தம் இல்லாமல் தவித்து வருகின்றனர் இயக்குனர்கள்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு பாடகராக அறியப்பட்ட சிவாங்கி, சிறு சிறு கதாபாத்திரங்களின் நடித்து நடிகையாக உருவெடுத்தார். அவருடைய காமெடி நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் அவருக்கான காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் சிவாங்கிக்கு வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். ஆனால் சிவாங்கி நடித்த காட்சிகள் அந்த படத்தின் இயக்குனருக்கு திருப்தி இல்லை. இயக்குனர் பல முறை சொல்லி கொடுத்தும், எதிர்ப்பார்த்த நடிப்பு சிவாங்கியிடம் வெளிப்படவில்லை.இதனால் சிவாங்கி நடித்த பல காட்சிகளை நீக்கிவிட்டார் நாய் சேகர் படத்தின் இயக்குனர். இந்த படத்தில் மிக குறைந்த காட்சிகளில் மட்டுமே சிவாங்கி இடம்பெறுகிறார்.

நடிப்பில் அனுபவம் இல்லாத நடிகை சிவாங்கி, தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் இன்னும் அங்கீகாரமே கிடைக்காத சிவாங்கி ஆணவத்துடன் நடந்து கொள்வது, அவரை சினிமாவில் ஆரம்ப கட்டத்திலே அட்ரஸ் இல்லாமல் செய்துவிடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அறிமுகம் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ள சிவாங்கி, படப்பிடிப்புக்கு முன்பு ரிகர்சல் அழைத்தால், நான் ரெம்ப பிசி என்று தெரிவித்து விட்டு ரிகர்சல் வருவதில்லை. நேரடியாக பட பிடிப்புதளத்திற்கு வரும் சிவாங்கி ஒரு கட்சியில் நடிக்க பல டேக் எடுத்து கொள்கிறார்.மேலும் முன்னணி நடிகைகள் கூட செய்யாத ஒன்றை செய்து வருகிறார் சிவாங்கி .

அவர் நடிக்கும் படத்தில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மேக்கப் மேன் மற்றும் ஹேர் ட்ரஸர் நியமித்தால் வேண்டாம் என புறக்கணிக்கும் சிவாங்கி. அவர் கூடவே மேக்கப் மேன் மற்றும் ஹேர் ட்ரெஸரை அழைத்து வருகிறார். இவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 14 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட காஸ்ட்யூம் பார்த்து செம்ம டென்ஷனாக்கியுள்ளார் சிவாங்கி .

இது என்ன காஸ்ட்யூம்.?விலை மிகவும் குறைவாக இருக்கிறது. சினிமாவில் என்னுடைய மார்க்கெட் வேல்யூ உங்களுக்கு தெரியுமா.? மாதத்திற்கு எத்தனை வெளிநாடு நிகழ்ச்சிகள் செல்கிறேன் என்று உங்களுக்கு தெரியாத என காஸ்ட்யூம் பார்த்து கோபப்பட்ட சிவங்கி. குறைந்தது என்னுடைய காஸ்ட்யூம் 6 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். குறைந்த விலை காஸ்ட்யூம் நான் போட மாட்டேன் என தெரிவித்த சிவாங்கி, படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்று விட்டார் என கூறப்படுகிறது.

இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பை பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த மற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகை சிவாங்கியை தங்கள் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதால், விரைவில் ஆணவத்தால் வாய்ப்புகள் இன்றி நடுத்தெருவில் நிற்பார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.