அமீருடன் நெருங்கிய நட்பில் இருந்த போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்…தப்பிக்கவே முடியாது..

0
Follow on Google News

டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்து, கடத்தல் கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது, சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனர் அமீரின் நெருங்கிய நண்பருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இயக்குனர் அமீரின் நண்பரான ஜாபர் சாதிக், போதை பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்ததும், மேலும் இந்த போதை பொருள் கடத்தல் மாஃபியா கும்பலின் தலைவனாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இயக்குனர் அமீரின் நண்பர் ஜாபர் சாதிக், தலைமறைவானதை தொடர்ந்து, அவர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இயக்குனர் அமீரின் நெருங்கிய நண்பர் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் சிக்கி தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அமீரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என அமீருக்கு எதிராக கேள்வி எழுந்து வந்த நிலையில், போதை பொருள் கடத்தலில் மாஃபியா தலைவனாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கும் தனக்கு சினிமா சார்ந்து எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது போன்ற மாயை உருவாக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு தன்னை யோக்கியனாக காட்ட முயற்சித்தார் இயக்குனர் அமீர்.

ஆனால் இயக்குனர் அமீர் மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிக்கிய ஜாபர் சாதிக் இருவரும், இணைந்து பல்வேறு தொழில்களில் பாட்னராக இருந்து வருவது அமபலமாகி உள்ளது, மேலும் இதற்கு முன்பு மேடை ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர், ஜாபர் சாதிக் தன்னுடைய உறவினர் என்றும், 5 வருடமாக தன்னிடம் நம்ம இணைந்து படம் பண்ணலாம் என்று கேட்டதால் அவருடன் சினிமா இணைந்து படம் எடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில், அமீர் அவருடைய வாயாலே, ஜாபர் சாதிக் தன்னுடைய உறவினர் என்று தெரிவித்துவிட்டு தற்பொழுது, போதை பொருள் கடத்தலில் தலைவனாக செயல்பட்டது ஜாபர் சாதிக் தான் என தெரியவந்ததும், அவருக்கும் தனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அமீர் தப்பிக்க பார்க்கிறார் என மேலும் அமீருக்கு எதிராக கடும் சர்ச்சை வெடித்தது. இப்படி நாட்டையே உலுக்கிய இந்த போதை பொருள் விவகாரத்தில் அமீர் பெயர் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ள நிலையில்.

தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமீர், அதில் அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி ஆகிய விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் நான்.அப்படி இருக்கையில் இது போன்ற குற்றச்செயல்களில் என்னை நீங்கள் தொடர்புபடுத்தி பேசுவதின் மூலமாக எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, என்னுடைய குடும்பத்திற்கு மன உளைச்சல்களை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்த ஒரு பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது என அமீர் தெரிவித்தது மேலும் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

அதாவது போதை பொருள் கடத்த மாஃபியா கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கா.? இல்லையா.? அதற்கு பதில் சொல்லாமல், மது, விபச்சாரம், வட்டி ஆகிய விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் என அமீர் பேசியிருப்பது மதத்தை வைத்து தப்பிக்க நினைக்கிறாரா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் தற்பொழுது போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் எந்த மார்க்கத்தை பின்பற்றி வருகிறார் என்பதை அமீர் தெளிவு படுத்துவரா.? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த வகையில் எல்லா மதத்திலும் தவறு செய்கின்றவர்கள் இருக்க தான் செய்கிறார்கள், அதனால் மதத்தை வைத்து அமீர் தப்பிக்க முடியாது, இந்த விவகாரத்தால் மதத்தை அமீர் உள்ளே இழுத்து பேசியதே தவறு என பலரும் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.