நைசாக தப்பிக்க பார்த்த அமீர்… போட்டுடைத்து மாட்டி விட்ட சூரி… போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அமீருக்கு தொடர்பு..

0
Follow on Google News

இயக்குனர் அமீர் இயக்கி நடிக்கும் இறைவன் மிக பெரியவன் படத்தில் நடிக்கும் நடிகர் சலீம், மற்றும் அவருடைய சகோதரர் ஜாபர் சாதிக் ஆகிய இருவரும் தற்பொழுது போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, டெல்லியில் சுமார் சுமார் 2500 ரூபாய் மதிப்புள்ள 1700 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டது, இந்த போதை பொருள் கடத்தலில் தலைவனாக செயல்பட்டது இயக்குனர் அமீர் நடிக்கும் இறைவன் மிக பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் என்பது அம்பலமாகியுள்ளது.

போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்க்கும் இயக்குனர் அமீருக்கும் இடையிலான உறவு என்பது சினிமா சார்ந்தது மட்டுமில்லை, அதையும் தாண்டி. தொழில் ரீதியாகவும் பட்டனராக இருந்து வருகிறார்கள், பல்வேறு தொழில் முதலீட்டில் போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் உடன் பங்குதாரராக உள்ளார் இயக்குனர் அமீர், அந்த வகையில் போதை பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்க்கும் இயக்குனர் அமீருக்கும் இடையில் சினிமா தவிர்த்து நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் போதை பொருள் கடத்தல் தலைவனும் அமீரின் நண்பருமான ஜாபர் சாதிக் தற்பொழுது வசமாக சிக்கி தலைமறைவாகியுள்ள நிலையில், போதை பொருள் கடத்தல் தலைவன் உடன் அமீருக்கு என்ன தொடர்பு என்கிற மிக பெரிய கேள்வி எழுந்ததை தொடர்ந்து, இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு எதுவும் தெரியாதது போன்றும்,

அதாவது இறைவன் மிக பெரியவன் படத்தின் படப்பிடிப்பு தீடிரென நிறுத்தப்பட்டது, எதற்க்கு நிறுத்தப்பட்டது என்று எனக்கு தெரியாது, ஆனால் தற்பொழுது வரும் செய்திகள் உண்மையாக இருந்தால் நிச்சயம் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தனக்கும் போதை வழக்கில் சிக்கியிருக்கும் ஜப்பார் சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் – இயக்குனர் என்ற உறவு தான் உள்ளது போன்று தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார் அமீர்.

ஆனால் ஜப்பார் சாதிக் உடன் இனைந்து உயர்தர (4am cafe & kitchen) மற்றும் The Law Cafe உணவகத்தை திறந்த அமீர், கடைத்திறப்பு விழா மேடையில் பேசும் போது “வாய்நிறைய நன்பர் ஜாப்பர்” நன்பர் ஜாப்பர் என பேசிய அமீர். கடைத்திறப்பு விழாவிற்கு வந்த விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் அனைவரும் கடையை அமீரும் ஜாப்பரும் இனைந்து தான் தொடங்கியதாக வாழ்த்து தெரிவித்த வீடியோ ஒன்றும் வயிறலாகி வருகிறது.

இந்நிலையில், போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் உடன் தனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என அமீர் எஸ்கேப் ஆகும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருக்கையில், அமீருக்கும் போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் இருக்கவருக்கும் தொடர்பு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடிகர் சூரி பேசிய வீடியோ ஓன்று வைரலாகி, அமீரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.

அமீரும் – ஜாபரும் இணைந்து தொடங்கிய காஃபீ கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகர் சூரி, இந்த கடையை அமீர் அண்ணன், ஜாபர் அண்ணன் இருவரும் இணைந்து தான் தொடங்கியுள்ளார்கள், என சூரி அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வரும் நிலையில், போதை பொருள் கடத்தல் தலைவன் ஜபருக்கு தனக்கு எந்த தொடர்பும் இல்லை என எஸ்கேப் ஆக நினைத்த அமீருக்கு, என்ன அண்ணே, நீங்களும் ஜாபரும் இணைந்து தானே காப்பி கடை திறந்தீங்க, உங்க இருவருக்கும் தொழில் ரீதியாக உறவு இருக்குல என்க எஸ்கேப் ஆக பார்க்கிறீர்கள் என அமீரை சிக்க வைப்பது போன்று அமைத்துள்ளது சூரியின் அந்த பேட்டி. இதனை தொடர்ந்து அமீர் புலனாய்வு துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது…