மீண்டும் விபத்தில் சிக்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை: நடந்தது என்ன?

0
Follow on Google News

விஜய் டிவிக்கு தொகுப்பாளியாக அறிமுகமாகி, ‘குக் வித் கோமாளி’யில் கோமாளியாக மாறி பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி, காயத்துடன் உயிர்தப்பினார். இந்நிலையில், தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கார் விபத்தில் மணிமேகலை சிக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், மணிமேகலையும், அவரது கணவர் ஹுசைனும் இணைந்து சமீபத்தில் பிஎம்டபிள்யூ என்ற விலையுயர்ந்த காரை வாங்கினார்கள். இதை மணிமேகலை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். என்னதான் புதிய கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக்கூடாது என்பதற்காக சமீபத்தில் தங்களுடைய பழைய காரில் மணிமேகலையும், ஹுசைனும் ஒரு டிரிப் சென்றுள்ளார்கள்.

அப்போது ஒரு லாரி ஒன்றில் இவர்களது கார் லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மணிமேகலைக்கும், ஹுசைனுக்கும் எந்தவிதமான காயம் இல்லை என்றாலும், காருக்கு சற்று சேதம் ஏற்பட்டுள்ளது. கார் விபத்து அடைந்தவுடன் அந்த பகுதியில் இருந்தவர்கள் பதற்றத்தோடு வந்து பார்த்துள்ளார்கள். அப்போது மணிமேகலை அந்த விபத்தை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதுகுறித்து, மணிமேகலை கூறும்போது, இப்படி விபத்து நடந்ததை நான் வீடியோ எடுத்தற்கு காரணம், எதிர்காலத்தில் இதை போட்டு பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வேன் என்றாராம். மேலும், தன்னை அக்கறையுடன் விசாரித்த அனைவரும் எனது அன்பு கலந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, 2017-ஆம் ஆண்டு விபந்து நடந்த விபத்துக்கு பின்னர்தான் மணிமேகலைக்கு திருமணம் ஆனதாம். அதேபோல் 2021-ஆம் ஆண்டு நடந்த விபத்துக்கு பின்னர் ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம் என்று மணிமேகலைக்கு சிலர் ஆறுதலும் கூறிவருகிறார்களாம். ஆனால், மணிமேகலையோ, 2021-ம் ஆண்டில் சுடுதண்ணி காலில் கொட்டியது, தற்போது விபத்து என தனக்கு பல சோதனைகளை தந்ததாகவும், 2022 வந்தவுடன் அதை பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் கூறியுள்ளார்.