யோகி பாபு-ஓவியா இணையும் புதிய படம்

0
Follow on Google News

தமிழ் சினிமா காமெடியன்களில் இப்போதைக்கு டாப் காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து இவர் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடியனாக வலம்வந்துகொண்டு வரும் யோகிபாபு, காமெடியனாக மட்டுமில்லாமல் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் இருந்தாலும், தற்போது மீண்டும் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் அறிமுகமாகவிருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஹீரோயினாக ஓவியா நடிக்கவிருக்கிறார்.

இப்போதைக்கு Production no 1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல்ராஜு தயாரிக்கிறார். கூடவே, அன்கா மீடியாவும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜை வருகிற செப்.24-ந்தேதி சென்னையில் உள்ள பாலு மகேந்திரா ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறது.