பொங்கலுக்கு உறுதியானது அஜித்தின் ‘வலிமை’

0
Follow on Google News

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர், தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘வலிமை’ படம் அடுத்த வருடம் அதாவது 2022 பொங்கலுக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.

ஏற்கெனவே, இப்படம் தீபாவளிக்கு வெளியாகிவிடும் என செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது தயாரிப்பாளரின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களை மேலும் காத்திருக்க வைத்திருக்கிறது. பொங்கல் வரைக்கும் காத்திருக்க முடியாது என ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், படத்திற்கு முன்னதாக டீசருக்காவும், டிரைலருக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.