அடி மேல் அடிவாங்கும் நயன்தாராவுக்கு விழுந்த அடுத்த அடி… இந்துக்களை சீண்டியதால் விழுந்த பலத்த அடி…

0
Follow on Google News

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தயாரிப்பு நிறுவனம்a netflix தளத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த செய்திதற்போது இணையத்தில் வைரலாகி நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ்இல் வெளியானது. இந்தப் படம் நயன்தாராவின் 75வது படம் என்பதால் அவர் பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த வசூலை குவிக்காததால் ஏமாற்றம் அடைந்தார். மேலும், விமர்சன ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. இதனால் நயன்தாரா கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது அன்னபூரணி படத்திற்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பி வருவதற்கு காரணம், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும் வசனங்களும் தான் என்று சொல்லப்படுகிறது.அதாவது, சமையல் தொழிலில் சாதிக்க நினைக்கும் பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. செஃப் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் இருந்து வரும் நயன்தாரா கடைசியில் தன் கனவை அடைந்தாரா என்பதே படத்தின் கதை.

குறிப்பாக, இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த ரமேஷ் சோலங்கி மத உணர்வை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த விஷயம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையானது. அந்த வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டைன்மென்ட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டது. அந்த கடிதத்தில், இணை தயாரிப்பாளர்களான எம் இன் இன்டென்ட் ஆர்டிஃபோவுடன் ஒருங்கிணைந்து, மேற்கூறிய திரைப்படம் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு உள்ளது.

மேலும், புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கும் விஷயத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் உடனே படம் வெளியான நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படத்தை நீக்குவதாகவும், குறிப்பிட்ட காட்சிகளை எடிட் செய்த பிறகு படத்தை மீண்டும் வெளியிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.மேலும், தெரிந்தே இந்த மாதிரியான தவறுகள் நடக்கவில்லை எனவும் இந்த விஷயத்தினால் புன்பட்ட ஹிந்து மற்றும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

படத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகள் நயன்தாராவை கலங்கச் செய்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றன. இருப்பினும் இணையவாசிகள் “இப்போதெல்லாம் படத்தை அரசியலாக்குவதும் அரசியலை படமாக்குவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது ..சினிமாவை சினிமாவாக பார்த்தாலே நல்லா இருக்கும் ” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.