அவமானப்படுத்திய நயன்தாரா… தரமான சம்பவம் செய்த லெஜெண்ட் சரவணன்.. என்ன தெரியுமா.?

0
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் சொந்த தயாரிப்பில் அவர் நடித்து வெளியாகி தற்பொழுது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் லெஜன்ட். இதற்கு முன்பு சரவணா ஸ்டார் கடை விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜெண்ட் சரவணன். அவருடைய நீண்ட நாள் சினிமா ஆசையை புரிந்து கொண்ட அவருடைய விளம்பர படத்தின் இயக்குனர்கள் ஜெர்ரி மற்றும் ஜெடி இருவரும் லெஜெண்ட் சரவணனுக்கான திரைப்படத்தை தயார் செய்தனர்.

இந்த படம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தன்னுடைய முதல் படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்கின்ற திட்டத்துடன் களம் இறங்கினார் லெஜென் சரவணன். அதிக சம்பளம் கொடுத்து இந்த படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இசை அமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ்க்கு பெரிய தொகை சம்பளமாக கொடுத்து இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று இந்த படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை நடிக்க லெஜெண்ட் சரவணன் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து எப்படியாவது நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்பதற்காக, அதிக சம்பளம் தருகின்றோம் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் நயன்தாரா தரப்பில் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து விட்டார், இதற்கு காரணம் பவர் ஸ்டார் போன்ற ஒரு நடிகர் லெஜெண்ட் சரவணன், அவருக்கு ஜோடியாக நடித்தால் தன்னுடைய பிரெஸ்டிஜ் என்னாவது என நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் லெஜெண்ட் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் அதிகம் சம்பளம் தருவதாக வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியமால் இங்கிருந்து வெளியே போங்க என்று அவமானப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை நயன்தாரா திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் பின்பு இந்தி நடிகை ஊர்வசி ராவ்டேலா இந்த படத்தில் அதிகம் சம்பளம் பேசி நடிக்க வைக்கப்பட்டுள்ளார். தன்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்கமாட்டேன் என மறுத்த நயன்தாராவுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என முடிவு செய்தார் லெஜெண்ட் சரவணன்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 10 கோடி. ஆனால் நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து லெஜெண்ட் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ராவ்டேலாவுக்கு 20 கோடி வரை சம்பளம் கொடுத்துள்ளார் லெஜெண்ட் சரவணன். அதிகம் சமபளம் வாங்கும் நடிகை நயன்தாராவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதற்காகவே ஊர்வசி ராவ்டேலாவுக்கு 20 கோடி சம்பளம் கொடுத்துள்ளார் லெஜெண்ட் சரவணன் என கூறப்படுகிறது.

ஏமாற்ற பட்ட லெஜெண்ட் சரவணன்…கோமாளியாக்கப்பட்ட பரிதாபம்… எப்படி இருக்கு லெஜெண்ட்..!