கரகாட்டக்காரன் கனகா இந்த நிலைமைக்கு காரணம் என்ன தெரியுமா.? உருகி உருகி காதலித்த காதலன் உயிரை விட்ட பரிதாபம்…

0
Follow on Google News

கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கனகா. கடைசியாக தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் மறைந்த நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் திரைத்துறையிலிருந்து விலகியிருந்த கனகா படங்களில் நடிக்கவில்லை. அதன்பின்னர் நடிப்பதில் இருந்து விலகிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். திரையுலகில் இருந்து முழுமையாக விலகியதற்கு காதல் தோல்வி, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டன. அதேபோல் தனது தந்தையுடன் சொத்து பிரச்சினையும் கனகாவுக்கு இருந்ததால், பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இன்றி பாழடைந்தது போல் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கு என உதவியாளர் ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் தனக்கான வேலைகள் அனைத்தையும் அவரே செய்து கொள்வதாகவும் கூறப்பட்டது. அக்கம் பக்கத்தினரால் கூட எப்போதாவது தான் இவரை பார்க்க முடியுமாம். அதே போல் இவரைப் பார்க்க கடந்த பல ஆண்டுகளாகவே எந்த பிரபலங்களும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் கனகாவை குட்டி பத்மினி சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில், நடிகை கனகாவுடனான தனது புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவை சந்தித்து மகிழ்ச்சி” என பதிவிட்டார். பின்னர் நடிகை குட்டி பத்மினி கனகாவை பேட்டி எடுக்க, முயன்ற போது… ஆரம்பத்தில் இவரிடம் நன்றாக பேசிய கனகா, பின்னர் இவர் அழைத்தால் கூட செல்போனை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.

எனவே அவர் யாருடனும் பேச விரும்பவில்லை என்பதையே அவரது செயல் காட்டுவதாகவும் அவருடைய வீட்டுக்கு வாசலில் நான் நின்றபோதும் கூட, அவர் தன்னை வீட்டுக்குள் கூட அனுமதிக்கவில்லை என்றும் குட்டி பத்மினி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் கனகா பற்றி பிரபல பத்திரிகையாளர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் ‘கனகாவின் அம்மா தேவிகாவால் நடிகர் ஒருவர் சினிமாவில் வாய்ப்பு பெற்றதாகவும், அவருடைய மகன்தான் ராமச்சந்திரன். இவர் கனகாவுக்கு பிஏ-வாக இருந்து வந்தார். கனகாவுடன் படப்பிடிப்புக்கு செல்வது, அவர் நடிக்கும் படங்களின் கதைகளை கேட்பது, அவரின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் மிகவும் நேர்மையாக செய்து வந்துள்ளார்.

பின்னர் கனகா இவரை மரியாதையாக நடத்தும் விதத்தை பார்த்து, ராமச்சந்திரனுக்கு கனகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவர் பல வருடங்கள் ஒருதலையாகவே கனகாவை காதலித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா, அவரை போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரன் இறந்து விட்டதாகவும், அதன் பின்பே கனகாவுக்கு ராமச்சந்திரன் எந்த அளவுக்கு தன்னை உண்மையாக காதலித்தார் என்கிற தகவல் தெரியவந்தது. அம்மாவின் இறப்போடு, இந்த குற்ற உணர்வும் கனகாவை மிகவும் பாதித்துவிட்டது. நிலைகுலைந்து போனார். இதனால் மனம் உடைந்து போன கனகா, சினிமாவும் வேண்டாம்,, எதுவும் வேண்டாம் என எண்ணி தன்னை தானே சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார் இந்த தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.