நடிகர் என்றால் என்ன கொம்பு இருக்கா… வரிசையில் நிற்காத அஜித்தை நேருக்கு நேராக கிழித்த முதியவர்.!

0
Follow on Google News

தேர்தலில் வாக்கு பதிவு வந்துவிட்டால், இந்த சினிமா துறையை சேர்ந்தவர்கள் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, வரிசையில் நின்று அந்த நடிகர் வாக்களித்தார், இந்த நடிகர் தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினார் என,அயோய்யா என்னமோ இவர்கள் தான் வரிசையில் நின்று வாக்களிப்பது போன்றும், என்னமோ இவர்கள் தான் ஜனநாயக கடமையாற்றுவது போன்ற ஓவர் பில்டப்களுக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்தார். அஜித் வாக்களித்த திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு வழக்கம் போல் 7 மணிக்கு தொடங்கிய நிலையில், சுமார் 6 மணி தொடங்கி முதியவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வாக்களிக்க வந்து காத்திருக்க தொடங்கினார்கள்.

மதியம் நேரம் வெயில் அதிகம் என்பதாலும், தாமதமாக சென்றால் கூட்டம் அதிகமாகி என்பதாலும் சீனியர் சிட்டிசன் என்று அழைக்ககூடிய முதியவர் நடிகர் அஜித் வாக்கு சாவடிக்கு வருவதற்கு மும்பே வந்து வாக்களிப்பதற்காக காத்திருந்தார். இப்படி அதிகாலையே முதல் வேலையாக தங்கள் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என பலரும் அஜித் வாக்களிக்க வந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வர தொடங்கினார்கள்.

இந்நிலையில் சரியாக காலை 6.30 மணிக்கு நடிகர் அஜித் வாக்களிக்க வாக்கு சாவடிக்கு வந்ததாக கூறப்படும் நிலையில், அவரை சிறிது நேரம் காத்திருக்குமாறு தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு மும்பே வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிலர் காத்திருந்தனர். இந்நிலையில் காலை 7 மணியளவில் வாக்களிப்பதற்காக வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் அஜித் முதல் நபராக சென்று அந்த வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்குப்பதிவை பதிவு செய்தார்.

இந்நிலையில் அஜித் வருவதற்கு மும்பே வாக்கு சாவடிக்கு வந்து காத்திருந்த முதியவர் செம்ம டென்ஷனில், அஜித் வருவதற்கு மும்பே நான் வந்துவிட்டேன், என்னை முதலில் அனுப்பாமல், எனக்கு பின்னால் வந்த அஜித்தை ஏன் அனுப்புகிறீர்கள் ஏன் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், நீண்ட நேரமாக அஜித் வருவதற்கு மும்பே வந்து காத்திருந்த அந்த முதியவர்.

நீண்ட நேரமாக சமாதானம் ஆகாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த முதியவரை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தும், அஜித் வருவதற்கு முன்பே நான் இங்கு வந்துவிட்டேன். ஆனால் எனக்கு முன்னாடி அவர் சென்றுவிட்டார், என்று தொடர்ந்து ஆதங்கத்துடன் பேசினார். மேலும் இடையிலே அஜித்தை நார் நாராக கிழித்து தொங்கவிட்ட சம்பவமும் அரங்கேறியது. இருந்தும் அந்த முதியவரை சமாதனம் செய்து அங்கிருந்த அலுவலர்கள் ஒட்டு போட வைத்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் வாக்களித்து ஜனநாயக கடைமையை ஆற்றியது பெரிய விஷயம் இல்லை, அதை ஜனநாயகப்படி செய்தாரா.? என மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது, அந்த வகையில் தனக்கு முன்பு வந்திருந்து காத்திருந்த முதியவர்கள் வாக்களிக்கட்டும், வரிசையில் நின்று நான் வாக்களிக்கிறேன் என அஜித் நடந்து கொண்டிருந்தால், அது தான் ஜனநாயகம், சினிமா பிரபலம் என்கிற ஒரே காரணத்திற்காக அஜித் முதல் நபராக வாக்களிப்பது தான் ஜனநாயகமா .? என பலரும் அஜித் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here