ரோகினி பற்றி முத்துவிடம் போட்டு விட்ட ஜீவா… வசமாக சிக்கிய ரோகிணி.. சிறகடிக்க ஆசை.!

0
Follow on Google News

சிறகடிக்க ஆசையில் வீட்டில் இருக்கும் எல்லோரையும் முத்து எல்லோருக்கும் போன் போட்டு கீழே வர சொல்ல, அண்ணாமலை எதுக்குடா கீழ வர சொன்னா என்று முத்துவை கேள்வி கேட்க முத்து கதவை திறந்து வண்டியை ஓபன் செய்ய சர்ப்ரைஸ் கொடுக்கிறார். அண்ணாமலை இது என்ன புது வண்டி யாருடையது? எதற்காக? என்று கேள்வி மேலே கேள்வி கேட்க, அதற்கு முத்து இது நம்முடையது தான்பா.

இனிமே இது தான் மீனாவோட பூக்கடை… நடமாடும் பூக்கடை, இனி யாரும் இந்த வண்டியை தூக்கிட்டு போக முடியாது. இங்க ஒரு பாக்ஸ் பிட் பண்ணிடுவோம். மீனா அதுல பூ வச்சு எங்க வேணாலும் கொண்டு போய் கொடுக்கலாம் என்று சொல்ல, இந்த ஐடியா நல்லா இருக்கு என்று அண்ணாமலை பாராட்ட விஜயாவின் முகம் மாறி விடுகிறது.

பிறகு மனோஜ் ரூமுக்கு வந்து ரோகிணியிடம் மீனாக்காக கார் வாங்கி கொடுத்திருக்கிறார். முத்து மீனாக்காக பைக் வாங்கி கொடுத்து இருக்கிறான். மனோஜ்க்கு சப்போர்ட் பண்றதுக்கு அவருடைய மாமனார் இருக்காரு. எனக்கு தான் சப்போர்ட் பண்ண யாரும் இல்ல என்றும், ”ரெண்டு தம்பிங்களும் டெவலபாகி போய்கிட்டே இருக்காங்க. நான் மட்டும் தான் தண்ணியில போட்ட கல்லு மாதிரி ஒரே இடத்துல நகராம இருக்கேன்’ என்று மனோஜ் சொல்கிறார்.

”சொந்தமா பிஸ்னஸ் பண்ணா அதுல நான் அச்சிவ் பண்ணுவேன்ற நம்பிக்கை இருக்கு. ஆனா அதுக்கு நான் பணத்துக்கு எங்க போவேன்” என்று மனோஜ் சொல்கிறார். ”அங்கிள் கொடுத்த 27 லட்சத்தை தொலச்ச இல்ல” அந்த ஜீவா தான் இப்போ நமக்கு இருக்க ஒரே வழி. உன்னுடைய 27 லட்சம் பணத்தை எடுத்துட்டு போன அந்த பொண்ணை தேடி கண்டுபிடித்து அவகிட்ட இருந்து பார்த்த திரும்ப வாங்கணும் என்று சொல்ல,

அதற்கு மனோஜ் அது எப்படி முடியும்? என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி அவ எப்படியோ ஒரு ஏஜென்சி மூலமாக தான போயிருக்கா. அங்க விசாரிச்சு கனடாவில் அவ இருக்கிற அட்ரஸை கண்டுபிடிச்சா நாம இங்கிருந்து கனடா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து அவளை புடிச்சு பணத்தை வாங்கிடலாம் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

அடுத்த கட்டத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் பாஸ்போர்ட் ஏஜென்சிக்கு வந்து ஜீவா பற்றி விசாரிக்கின்றனர். அப்போது அவர்கள் ஜீவாவின் போட்டோவை கேட்க மனோஜ் தன்னுடைய ஃபோனில் இருக்கும் ஜீவாவின் போட்டோவை எடுத்துக்காட்டுகிறார். இப்படி ஒருபக்கம் செல்ல, ஜீவா கேரக்டர் சீரியலில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கிறார். அதாவது முத்து காரில் ஜீவா பயணம் செய்கிறார் அப்போது முத்து நீங்க எங்க இருந்து வருகிறீர்கள் என கேட்க கனடா என்கிறார்.

27 லட்சத்தை சுருட்டிட்டு ஓடுன ஜீவா தற்பொழுது என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் ஜீவாவை பிடித்து அந்த பணத்தை குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சுருட்டி விடலாம் என ரோகிணி திட்டமிடுகிறார். ஒரு வழியாக ஜீவா தமிழ்நாட்டில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் போலீசில் புகார் 27 லட்சத்தை கைப்பற்றி அதை குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் மனோஜிடம் 27 லட்சத்தை சுருட்டியது இந்த பெண் தான் என ஜீவா புகைப்படத்தை பார்த்த முத்து, இந்த பெண் என்னுடைய காரில் பயணித்த பெண்ணாச்சே, என முத்து தேட ஆரம்பிக்க, எதார்த்தமாக முத்து காரில் சவாரி ஏறுகிறார் ஜீவா, வாம்மா உன்னை தான் தேடிட்டு இருந்தேன், நீ தான மனோஜ்ட பணத்தை சுருட்டிட்டு ஓடின என முத்து மிரட்ட, என்னிடம் இருந்து மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் திருப்பி பணத்தை வாங்கிவிட்டார்கள் என போட்டு கொடுத்துவிடுகிறார் ஜீவா. இதன் பின்பு அடுத்தடுத்து விறுவிறுப்பாக செல்ல இருக்கிறது சிறகடிக்க ஆசை.